இரு வேடங்களில் மிரட்ட வரும் அஜித்… வெளியான விடாமுயற்சியின் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். தற்போது துணிவு திரைப்படத்தை அடுத்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது இதன் படப்பிடிப்பு. மற்ற நடிகர்களின் படங்களுக்கான அப்டேட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்க, இப்படத்திற்கு மட்டும் எந்தவித அப்டேட்டுகளும் வெளிவராமல் படப்பிடிப்பும் தொடங்காமல் இருந்தது.

இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்துடனும் இருந்தனர். தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இப்படத்தில் அஜித் குமாருக்கு நாயகியாக திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது அஜித்குமார் மற்றும் திரிஷாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து படக்குழு துபாய் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் நிறைந்து இருப்பதால் துபாய் பாலைவனத்தில் பிரம்மாண்ட சண்டை காட்சி அமைக்க படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இறுதி கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. விடாமுயற்சி படத்தில் அஜித் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் இளமை தோற்றத்தில் ஒரு வேடம் மற்றும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மற்றொரு வேடத்தில் வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. படக்குழு தரப்பினரின் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தவிர மற்றொரு ஹீரோயினாக ரெஜினாவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விடாமுயற்சி படத்தைப் பற்றி வெளியாகி உள்ள இந்த புதிய அப்டேட்டுகள் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...