டிரைவர் ஜமுனா படம் எப்படி? திரைவிமர்சனம்

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளதாக தெரிகிறது.

கால் டாக்சி டிரைவர் கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் நிலையில் அவரது தந்தை திடீரென கொலை செய்யப்படுகிறார். தந்தை இறப்பிற்குப் பின்னர் தந்தை ஒட்டிய கால் டாக்சியை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டி வருகிறார்

இந்த நிலையில் ஒரு அரசியல் தலைவரை கொலை செய்யும் நோக்கில் செல்லும் கூலிப்படையினரிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது

கால் டாக்சி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் மிக அபாரமாக நடித்து உள்ளார். முதல் பாதி மந்தமாக இருந்தாலும் இரண்டாவது பாதி ஜெட் வேகத்தில் விறுவிறுப்பாக உள்ளது. ஒரு மிடில்கிளாஸ் மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்புள்ள கேரக்டரில் நடித்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அரசியல்வாதிகளின் ஆதிக்கம், தந்திரம், அரசியல் நுணுக்கங்களையும் இந்த படம் பேசி உள்ளதால் இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Bala S

Recent Posts