ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லேட்டஸ்ட் ஒர்க்கவுட் வீடியோ!.. மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிட்டாரே!..

லால் சலாம் படத்தை இயக்குவதற்கு முன்னதாக தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை ரஜினிகாந்தின் முதல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டு வந்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடற்பயிற்சி வீடியோ:

லால் சலாம் படத்தின் தோல்விக்கு பிறகு தனது அடுத்த படம் தொடர்பான வேலைகளை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆரம்பிப்பார் என்னை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க்கவுட் வீடியோக்களை போட ஆரம்பித்துள்ளார்.

படம் இயக்குவதில் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பிரச்சனை உண்டானது என தகவல்கள் வெளியான நிலையில், லால் சலாம் படத்தின் தோல்விக்கு பிறகு மீண்டும் அவர் தனுஷ் உடன் இணைந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் நிரந்தரமாக பிரிவதற்கு சட்டபூர்வமாக விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் வெளியிட்ட பிரிவு அறிவிப்பு ரசிகர்களை மட்டுமின்றி திரைத் துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின் இருவரும் எப்படியாவது இணைந்து விடுவார்கள் என பலரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என உறுதியாக தற்போது அறிவித்து விட்டனர்.

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து இயக்கிய லால் சலாம் திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. அந்த படத்தில் மொய்தின் பாய் எனும் கதாபாத்திரத்தில் மகளுக்காக நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ்டெண்டெட் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

லால் சலாம் தோல்வி:

ஆனால், அப்பா ரஜினிகாந்த் செய்த உதவியையும் மறந்துவிட்டு அவர் நடித்ததால் தான் படம் சரியாக ஓடவில்லை என்றும், படத்தின் ஹார்ட் டிஸ்க்கே தொலைந்துவிட்டது. அதில் பல காட்சிகள் நன்றாக எடுத்ததெல்லாம் தொலைந்து போன நிலையில், சுமாராக எடுத்த காட்சிகளை வைத்து எடிட் செய்து இப்படி ஒரு படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துவிட்டோம் என்றே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர் கிளப்பினார்.

லால் சலாம் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு ரஜினிகாந்த் படம் என்று வியாபாரம் செய்து தலையில் கட்ட பார்த்த நிலையில், அந்தப் படத்தைப் பார்த்த ஓடிடி நிறுவனம் உஷார் ஆகிவிட்டு குறைந்த விலைக்கு கேட்டதால் இன்னமும் ஓடிடிக்கு விற்க முடியாத சூழல் நிலவி வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில், மீண்டும் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை அதிகரிக்க ஆரம்பித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ரஜினிகாந்த் மகளாக இருந்தும் இன்னமும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் ரசிகர்கள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...