சும்மா விடமாட்டேன் என மிரட்டிய திரிஷா!.. திடீரென அந்தர் பல்டி அடித்த அதிமுக மாஜி எம்எல்ஏ!

கூவத்தூர் ரெஸாட்டில் அதிமுகவினர் தங்கி இருந்தபோது குடியும் கும்மாளமுமாக இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், பல நடிகைகளை நடிகர் கருணாஸ் அழைத்து வந்ததாகவும் நடிகை திரிஷா தான் வேண்டும் என சிலர் அடம் பிடிக்க அவருக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்து அழைத்து வந்தனர் என ஏவி ராஜு பகீர் குற்றச்சட்டை முன்வைத்தார்.

திரிஷா பற்றி அவதூறு பேச்சு:

நடிகர் கருணாஸ் பற்றியும் நடிகை திரிஷா பற்றியும் வெளிப்படையாக பெயர் சொல்லியே அவதூறு கருத்து வெளியிட்ட நிலையில், கருணாஸ் இந்த பிரச்சனை குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காத நிலையில், நடிகை திரிஷா தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும் தன்னைப் பற்றி கீழ்த்தரமாக தேசிய நபர் மீது விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார்.

நடிகை திரிஷாவின் ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தான் திரிஷா பற்றி பேசியதில்லை என்றும் திரிஷா போன்ற இளம்பெண்ணை தான் கேட்டார் என சொல்ல வந்தேன், அந்த செய்தியை வெளியிட்ட மீடியா அதை திரித்து விட்டனர் என அப்படியே அந்தர் பல்டி அடித்து பேசி இருக்கிறார்.

பதிலடி கொடுத்த திரிஷா:

நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவுக்கு ஆதரவாக இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சினிமா நடிகைகள் குறித்து அவதூறு கருத்தை தெரிவித்துள்ள அரசியல்வாதி போன்ற நபர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். சட்டப்படி அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

குஷ்பூ ஆதரவு:

மேலும் நடிகை குஷ்பூ, இவர்கள் எல்லாமே இப்படி மோசமானவர்கள் தான் அதை எல்லாம் கண்டு அச்சம் கொள்ளாமல் துணிச்சலுடன் எதிர்த்து நின்று தைரியத்தை பாராட்டுகிறேன். தொடர்ந்து தைரியமாக இரு ஆதரவு எப்போதும் உனக்கு இருக்கும் என நடிகை குஷ்பூவும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

சமூக வலைதளங்கள் முழுவதும் ஏவி ராஜுவின் வீடியோ வெளியானதில் இருந்தே திரிஷா பற்றிய விவாதங்களும் கேலி கிண்டல்கள் ஆன மீம்களையும் போட்டு வைரலாகி வந்த நிலையில், தற்போது திரிஷாவின் பதிலடி மற்றும் ஏவி ராஜுவின் அந்தர் பல்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...