18 வருடங்கள் திரையுலகில் கிடைத்த பெயர்.. சினிமா பயணத்தை முடித்து எம்.எல்.ஏவை மணந்த நடிகை..

தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் நடித்த நடிகை ஒருவர் 18 ஆண்டுகள் திரையுலகில் ஜொலித்த நிலையில், திமுக எம்.எல்.ஏவை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். திரைப்படங்களில் நடித்ததுடன் மட்டுமில்லாமல், ஒரு சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளவர் தான் நடிகை வசந்தி. சிறுவயதிலேயே நடிப்பின் மீது உள்ள ஆசை காரணமாக நடனம் நாட்டியத்தை கற்றுக் கொண்ட நிலையில் அவருக்கு இளம் வயதிலேயே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

1960 ஆம் ஆண்டு மகாகவி காளிதாஸ் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அவர் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக அவருக்கு பல தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதே போல் ஜெமினி கணேசன் நடித்த ‘தேனிலவு’ என்ற திரைப்படத்தில் அவர் முதல் முறையாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் லலிதா என்ற கேரக்டரில் நடித்து அசத்திருப்பார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தமிழிலும் அவர் பிஸியான நடிகையாக மாறினார். எம்.ஜி.ஆர் நடித்த ’மாடப்புறா’ என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வசந்தா என்ற கேரக்டரில் நடித்தார். அதே போல் அழகு நிலா, அவன் தான் இவன், பலே பாண்டியா, பொம்மை, என்னதான் முடிவு ,சரசா பிஏ ஆகிய படங்களில் நடித்தார். அவனா இவன் இந்த படத்தில் இவர் ஜமுனா என்ற கேரக்டரில் சூப்பராக நடித்திருப்பார்

தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்தாலும் தெலுங்கிலும், கன்னடத்திலும் ஏராளமான படங்களில் நடித்தார். . மேலும் அவர் இரண்டு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிசியான நடிகையாக திரையுலகில் ஜொலித்து வந்த நிலையில் தான் அவர் திமுக எம்எல்ஏ சீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு.

1960 முதல் 78 வரை 18 ஆண்டுகளில் பல திரைப்படங்களில் நடித்த அவர் திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிவிட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி அவர் சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். இரண்டாவது கதாநாயகியாக மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் பல திரைப்படஙக்ளில் நடித்த வசந்தாவின் நடிப்பு இன்றும் அந்த கால ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.