பொழுதுபோக்கு

ஒரு ரூபா கூட சம்பளம் வாங்காமல் ஊர்வசி நடித்து கொடுத்த படம்.. ரிலீஸுக்கு பிறகு நடந்த அற்புதம்..

தென் இந்திய சினிமாவில் எக்கச்சக்க நடிகர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். அதே நேரத்தில், நிறைய நடிகைகளும் கூட தங்களின் அசாத்திய நடிப்பால் தங்களுக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருந்தனர். அந்த வகையில், மிக பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் ஊர்வசி.

கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து, மலையாள திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான ஊர்வசி, அடுத்தடுத்து மலையாள படங்களில் நடித்து வந்தார். இதற்கடுத்து பாக்யராஜ் இயக்கத்தில் தமிழில் உருவான முந்தானை முடிச்சு படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தார். தமிழில் அவர் அறிமுகமான முதல் படமே அவரை தென்னிந்திய சினிமா முழுவதும் திரும்பி பார்க்க வைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என தென் இந்திய மொழிகளில் பிசியாக நடித்து வந்த ஊர்வசியின் சிறப்பம்சமான விஷயமே, எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை மிகக் கச்சிதமாக செய்வது தான். காமெடியாக நடிப்பதாக இருந்தாலும் சரி, மிகவும் எமோஷனலாக கண்ணீர் வருவது போல நடிப்பதாக இருந்தாலும் சரி எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஹீரோவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தனது திறமையை வெளிப்படுத்துவதில் ஊர்வசி கில்லாடி.

நடிகை ஊர்வசி, கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், சத்யராஜ், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நிலையில், ரஜினிகாந்துடன் மட்டும் ஏனோ ஜோடி சேரவில்லை. நாயகியாக ஒரு காலத்தில் கலக்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி இருக்கையில் நடிகை ஊர்வசி சம்பளம் வாங்காமல் ஒரு திரைப்படத்தில் நடித்தது தொடர்பான செய்தி, பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது. மலையாளத்தில் பிரபல இயக்குனராக இருந்தவர் MP சுகுமாரன் நாயர். இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்கி வெளியான திரைப்படம் ‘கழகம்’. இந்த திரைப்படத்தில் ஊர்வசி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மேலும் கழகம் திரைப்படம், கேரள மாநில அரசுக்கான சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகை ஆகிய விருதுகளை வென்றிருந்தது. இந்த திரைப்படத்தில் தான் ஊர்வசி ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார். அவருக்கு அந்த ஸ்க்ரிப்ட் மிகவும் பிடித்திருந்தததாகவும், அதனால் சம்பளம் வாங்காமல் ஊர்வசி நடித்திருந்ததாகவும் தகவல் தெரிவிக்கும் சூழலில் அவருக்கு மாநில அரசின் விருதையும் அந்த திரைப்படம் வாங்கி கொடுத்ததை சம்பளத்தை விட உயர்ந்ததாக கருதுகிறார்.

மேலும் இன்று பல கதாநாயகிகள் அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை உயர்த்தி கொண்டே போகும் சூழலில், ஊர்வசி போல அர்ப்பணிப்புடன் சினிமா துறையில் இருக்கும் சில நபர்களால் தான் இப்படி ஒரு முடிவை எடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Published by
Ajith V

Recent Posts