வாட்டி வதைத்த திருமண வாழ்க்கை.. கையில் குழந்தையோடு அறிமுகமான முதல் கதாநாயகி!!.. தென் இந்திய சினிமாவை ஆண்டது எப்படி?

தமிழ் சினிமாவில் பொதுவாக கதாநாயகிகளாக பலர் அறிமுகமாகும் போது பலரும் இளம் பருவத்தில், திருமணத்திற்கு முன்பாக நடிக்க வருவதை பார்த்திருப்போம். அப்படி வருபவர்களும் தங்களின் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பைத் தொடர முடியாமல் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் சூழல் உருவாகும்.

இன்னும் ஒரு சிலர், திருமணத்திற்கு பிறகும் குடும்பத்தினர் ஆதரவுடன் தொடர்ந்து நடிப்பதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி இருக்கையில், பழம்பெரும் நடிகை ஒருவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த விஷயம், பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென் இந்திய மொழிகளில் சுமார் 400 படங்கள் வரை நடித்துள்ளவர் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி. சுமார் 80 ஆண்டுகளாக திரைப்பயணத்தில் இருந்து வரும் இவர், சினிமா பயணம் ஆரம்பித்த சமயம் சற்று கடினமானது தான். நாடகங்களில் தோன்றிய சவுகார் ஜானகிக்கு சினிமா வாய்ப்புகள் வந்த போதும் அவரது வீட்டில் யாரும் சம்மதம் தெரிவிக்கவில்லை.
sowcar janaki actress

மறுபுறம் சவுகார் ஜானகி வீட்டில் அவருக்கு திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடுகள் நடந்தது. அவர் வேறொருவரை காதலித்து வந்த போதும் அதை ஏற்காமல், திருமண ஏற்பாடுகளில் குடும்பத்தினர் மும்முரம் காட்ட, அவர்கள் பார்த்த மாப்பிள்ளை எஞ்சினியர் என பொய் சொல்லி சவுகார் ஜானகியை திருமணம் செய்து கொள்ள திட்டம் போட்டிருந்ததும் தெரிய வந்தது. இதை எல்லாம் மீறி, அவர்களின் திருமணமும் நடைபெற, வறுமையின் சூழ்ச்சிக்கு தள்ளப்பட்டார் சவுகார் ஜானகி. அவர்களுக்கு குழந்தையும் பிறந்து விட, சவுகார் என்னும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் ஜானகியை தேடி வந்தது.

குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த வாய்ப்பையும் அவர் ஏற்றுக்கொள்ள, ஆடிஷனுக்கு பிறகு நாயகியாகவும் தேர்வானார் சவுகார் ஜானகி. LV பிரசாத் இயக்கத்தில் முதல் படம், நாயகனாக தெலுங்கு சினிமாவின் முன்னாள் சூப்பர்ஸ்டார் என்.டி. ராமராவ் என ஜானகிக்கு முதல் படத்திலேயே யோகமும் அடித்தது. மேலும் இந்த படத்திற்கு பின்னர் ‘சவுகார்’ ஜானகி என்ற பெயரும் அவருக்கு உருவானது.
janaki old movie

ஆனாலும் வறுமை ஒரு பக்கம் பாடாய் படுத்த ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் மயங்கியே விழுந்து விட்டார் சவுகார் ஜானகி. அப்போது படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ். வாசன் அவரிடம் இது பற்றி விசாரிக்க, குடும்ப வறுமை நிலையை காரணமாக சொன்னார் சவுகார் ஜானகி. உடலும் மெலிந்த நிலையில் காணப்பட்ட அவருக்கு உடனடியாக உதவி செய்த வாசன், ஜானகிக்காக அந்த படத்தின் படப்பிடிப்பையே சில நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். பல இடங்களில் சவுகார் ஜானகி பேசும் போது கூட தயாரிப்பாளர் எஸ்.எஸ். வாசனை மிகவும் பெருந்தன்மையான மனிதர் என்றும் நினைவு கூர்ந்துள்ளார்.

இது போக, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சவுகார் ஜானகி, சமீபத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். கடந்த 80 ஆண்டுகளாக தென் இந்திய சினிமாவில் கோலோச்சி வரும் சவுகார் ஜானகியை பலரும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.