முதல் படத்திலேயே இப்படி ஒரு அறிமுகமா.. எந்த நடிகைக்கும் கிடைக்காத பாக்கியம்.. சீரியலிலும் சாதிச்ச சாதனா!

சினிமாவில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் அவ்வளவு எளிதில் ஒரு அருமையான வாய்ப்பு அமைந்து விடாது. சிறந்த நடிகராக அல்லது நடிகையாக ஒருவர் உருவாக வேண்டுமென்றால், அதற்காக நிறைய மெனக்கெடல்களுடன் போராடும் பட்சத்தில் தான் சிறந்த கதாபாத்திரமும் அமைந்து அவர்களின் வாழ்வையே புரட்டிப் போடும்.

அந்த வகையில், முதல் படத்திலேயே மிக சிறந்த அறிமுகம் கிடைத்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்த ஒருவரை பற்றி தான் பார்க்கப் போகிறோம். நடிகை சாதனா ஆந்திராவை சேர்ந்தவர். சிறு வயதிலேயே அவர் பரதநாட்டியத்தை பத்மா சுப்பிரமணியன் அவர்களிடம் முறையாக கற்றுக் கொண்டார். அதேபோல் அவர் குச்சிப்புடி நாடகத்தையும் கற்றுக் கொண்டார்.

இவர் பிரபல கன்னட நடிகை ரம்பா தேவியின் பேத்தி என்பது பலர் அறியாத உண்மை. நடிகை சாதனா கடந்த 1984 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த ‘ஹிட்லர் உமர்நாத்’ என்ற திரைப்படத்தில் சிவாஜியின் மகளாக அறிமுகமானார். அந்த படம் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றாலும் அதன் பிறகு ’நெஞ்சத்தை அள்ளித்தா’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். மோகன் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த படத்தின் வெற்றி காரணமாக சாதனாவுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கவும் செய்திருந்தது.

sadhana1

வாய்ச் சொல்லில் வீரரடி, அர்த்தமுள்ள ஆசைகள், உன்னை தேடி வருவேன், குளிர்கால மேகங்கள், நானும் ஒரு தொழிலாளி, ராஜமரியாதை, காவலன் அவன் கோவலன், ரத்த தானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடந்த 1990 களில் மனைவி ஒரு மாணிக்கம், வெற்றி கரங்கள், ராஜா எங்க ராஜா, நெஞ்சினிலே உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு நடிகை சாதனா சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தினார். சின்னத்திரையில் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான கோபுரம், பணம், நம்பிக்கை, பெண், அவர்கள் சொர்க்கம், வேப்பிலைக்காரி போன்ற சீரியல்களில் நடித்தார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பான லட்சியம், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகள் போன்ற பல சீரியல்களில் இவர் நடித்தார். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சில சீரியல்களில் அவர் நடித்துள்ளார்.

சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டது போல சீரியலில் கிடைத்த வாய்ப்பையும் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட நடிகை சாதனா, படு பிசியாகவும் சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.