1993-ல் ஒரே படம்.. அதன்பின் 24 வருடங்கள் என்ன செய்தார் ரேவதியின் முன்னாள் கணவர்..!

தமிழ் திரையுலகில் கடந்த 90 களில் முன்னணி நடிகையாக இருந்த ரேவதியின் கணவர் தான் சுரேஷ் மேனன். ஐவரும் நிறைய திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான். கடந்த 1993 ஆம் ஆண்டு ’புதிய முகம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கவும் செய்திருந்தார். மேலும் ரேவதி அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார்.

’புதிய முகம்’ திரைப்படத்திற்கு பிறகு அவர் ’பாசமலர்கள்’ என்ற திரைப்படத்தை 1994ஆம் ஆண்டு இயக்கினார். இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்றாலும் அரவிந்த்சாமி, ரேவதி இணைந்து நடித்தனர். இந்த படத்திற்கு பிறகு 24 வருட இடைவெளி விட்டு 2017 ஆம் ஆண்டுதான் ’சோலோ’ என்ற திரைப்படத்தில் அவர் ஒரு கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு வரிசையாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

suresh menon 2

குறிப்பாக சூர்யா நடித்த ’தானா சேர்ந்த கூட்டம்’ என்ற திரைப்படத்தில் உத்தமன் என்கிற வில்லன் கேரக்டரில் நடித்து இருப்பார். அதேபோல் விஜய் சேதுபதி நடித்த ’ஜுங்கா’ திரைப்படத்தில் குமாரசாமி செட்டியார் என்ற ஒரு அசத்தலான கேரக்டரில் நடித்திருப்பார். சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்த அவர் மீண்டும் தமிழில் ’சேதுபதி’ ’பொன்மாணிக்கவேல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  பாலகிருஷ்ணா நடித்த ’அகண்டா’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த சுரேஷ் மேனன்,  ’கூகுள் குட்டப்பா’ ’அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ ’மைடியர் பூதம்’ போன்ற படங்களில் நடித்தார்.

அதன் பிறகு விக்ரம் நடித்த ’கோப்ரா’, ஆர்யா நடித்த ’கேப்டன்’ போன்ற படங்களில் நடித்த சுரேஷ் மேனன், ‘கோஷ்டி’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருப்பார். மேலும் அவர் விமல் நடித்த ’துடிக்கும் கரங்கள்’, ராகவா லாரன்ஸ் நடித்த’ சந்திரமுகி 2’ ஆகிய படங்களில் நடித்தார் ’சந்திரமுகி 2’ படத்தில் அவர் ரங்கநாயகியின் சகோதரராக நடித்திருந்தார்.

suresh menon 1

திரைப்படங்களில் மட்டுமின்றி சில தொலைக்காட்சி சீரியல்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாக்டர்ஸ்’ ’சின்ன சின்ன ஆசை’ ’நிழல்கள்’ போன்ற சீரியல்களில் நடித்த அவர் பாலிமர் டிவியில் ஒளிபரப்பான ’ராஜமன்னார் வகையறா’ கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ’மீரா’ போன்ற தொடர்களில் நடித்தார். மேலும் அவர் ’விடுதலை’ ’மருமகள்’ போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளதுடன் ஒரு சில படங்களில் அவர் தயாரித்துள்ளார்.

நடிகை ரேவதியை சுரேஷ் மேனன், கடந்த 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், 2013ஆம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் திரைப்படங்களின் பக்கம் தலை வைக்காமல் இருந்த சுரேஷ் மேனன், தற்போது தொடர்ந்து பல நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.