மகனால் மீண்டும் தமிழ் சினிமாவில் அடுத்த ரவுண்டு வந்த நடிகை.. சாந்தனு கொடுத்த ஊக்கத்தால் கலக்கும் பூர்ணிமா பாக்யராஜ்

தமிழ் சினிமாவில் 80-களின் நடிகைகளை ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. ராதா, அம்பிகா, ஸ்ரீபிரியா, சுகாசினி, ராதிகா, ரேவதி, நதியா, சில்க் ஸ்மிதா, போன்ற பல நடிகைகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். அந்த வகையில் பாக்யராஜுடனும், மோகனுடனும், மோகன்லாலுடன் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகைதான் பூர்ணிமா. தமிழில் 1981-ல் வெளியான நெஞ்சில் ஒரு முள் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் கிளிஞ்சல்கள் என்ற படத்தில் நடித்தார். 1982-ம் ஆண்டு பூர்ணிமாவுக்கு அதிர்ஷ்டமான வருடம் என்று சொல்லலாம். மோகனுடன் இவர் நடித்த பயணங்கள் முடிவதில்லை படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் பட்டிதொட்டியெங்கும் பூர்ணிமா மிகப் பிரபலம் அடைந்தார். மேலும் அந்த வருடமே 10-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார் பூர்ணிமா. தங்கமகன் படத்தில் ரஜினியுடன் போட்டிப் பாடலில் இவர் ஆடிய நடனம் சூப்பர் ஹிட் ஆனது.

தொடர்ந்து மலையாளப் பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது. மலையாளத்தில் முதல் படத்திலேயே மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகை ஆனார். தொடர்ந்து கே.பாக்யராஜுடன் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்திற்குப் பின் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. பாக்யராஜும் இவர் தொடர்ந்து நடிப்பது பற்றி ஏதும் கூறாததால் அப்படியே நடிப்பதை நிறுத்தினார் பூர்ணிமா பாக்யராஜ்.

விசுவைக் கடுப்பேற்றிய கண்ணதாசன்.. ஆனாலும் கவிஞருக்கு இம்புட்டு குசும்பு ஆகக் கூடாது..

இடையில் சில வாய்ப்புகள் வந்தாலும் நடிப்பு மீதான ஆர்வம் சுத்தமாகக் குறைந்து விட்டது. நடிப்பு வேண்டாம் என்றிருக்கியில் விஜய்க்கு அம்மாவாக ஜில்லா படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதிலும் மோகன்லால் ஜோடி. எனவே மீண்டும் 29 ஆண்டுகள் கழித்து நடிக்க ஆரம்பித்தார். பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளின் மகனான நடிகர் சாந்தனு தன் தாய்க்கு ஊக்கம் கொடுத்திருக்கிறார்.

சினிமா வேண்டாம் என்றிருந்த நிலையில் மீண்டும் அவரை ஜிம்முக்குப் போகச் சொல்லி, நடிப்பின் மீதான ஆர்வத்தை மீண்டும் ஏற்படுத்தியது சாந்தனுதானாம். மேலும் சாந்தனு தீவிர விஜய் ரசிகர் என்பதால் ஜில்லா பட வாய்ப்பு பூர்ணிமாவுக்கு வந்த போது அதை ஏற்கச் சொல்லி தன் தாய் பூர்ணிமாவிடம் வற்புறுத்தி நடிக்க வைத்திருக்கிறார் சாந்தனு.

இதனைத் தொடர்ந்து பூர்ணிமா பாக்யராஜ் மீண்டும் கம்பேக் கொடுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து அம்மா கதபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நிறைய சீரியல்களிலும் நடித்து தற்போது மீண்டும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் இந்த 80களின் கனவுக்கன்னி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...