திடீரென கருப்பு நிறத்தில் மாறிய உடல்.. நடிகர் விஜய் ஆண்டனிக்கு என்ன ஆச்சு..? வைரலாகும் புகைப்படம்

தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் நூலை இயற்றியவர் மயூரம் வேதநாயகம். இலக்கிய உலகிலும், தமிழ் ஆர்வலர்களிடத்திலும், அரசுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடமும் நன்கு அறிமுகமான மயூரம் வேதநாயகத்தின் கொள்ளுப் பேரன் தான் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரர் மூலம் சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி குறுகிய காலத்திலேயே அதிரடி மற்றும் மெல்லிசையால் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தொடர்ந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் ஹீரோவாக அரிதாரம் பூசினார். கிரைம் திரில்லர் கதையாக உருவாகிய நான் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் போன்ற ஹிட் படங்களிலும் நடித்தார். இயக்குநர் சசி இயக்கிய பிச்சைக்காரன் படம் இவரை பெண்கள் மத்தியிலும் சென்று சேர வைத்தது. தொடர்ந்து நடிப்பிலேயே கவனம் செலுத்தி வரும் விஜய் ஆண்டனி கடைசியாக ரோமியோ படத்தில் நடித்தார்.

தமிழக காவல் துறையினருக்கு கருணைத் தொகையை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. காவல் துறையினர் வரவேற்பு

தற்போது இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இனிபினிட்டி வென்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.மேலும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி உள்பட 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வருகைதந்த விஜய்ஆண்டனி உடலின் ஒரு பகுதி முழுவதும் கருமை நிறத்துடன் காணப்பட்டார். அங்கிருந்தவர்கள் விஜய் ஆண்டனியைப் பார்த்து அதிர்ச்சி அடைய கூலாக அவர் இது படத்திற்கான மேக்கப்தான். இந்தப் மேக்கப்பை கலைத்தால் மீண்டும் போட 1 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பதால் அப்படியே வந்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews