சமுதாயத்தில் இருக்கும் கட்டுப்பாடுகளை சினிமா மூலம் தகர்க்க வேண்டும்… அதுக்காக தான் வந்திருக்கிறேன்… மாரி செல்வராஜ் ஆவேசம்…

மாரி செல்வராஜ் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள புளியங்குளத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். வறட்சி களங்களில் இவரின் தந்தை வெளியூர்களுக்கு சென்று வேடமிட்டு நடனமாடும் தொழிலை செய்பவர். அப்படி ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் மாரி செல்வராஜ்.

சிறு வயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் கொண்ட மாரி செல்வராஜ் படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்தார். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக சேர்ந்து மூன்று படங்களில் பணியாற்றியுள்ளார். 2018 ஆம் ஆண்டு ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படமே வெற்றிப் படமாக மாரி செல்வராஜ் அவர்களுக்கு அமைந்தது. சாதி வேறுபாடால் நடக்கும் கொடுமைகளை ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் எடுத்துக்காட்டி அனைவரின் கவனத்தை ஈர்த்தார் மாரி செல்வராஜ்.

தொடர்ந்து 2021 ஆம் தனுஷை வைத்து ‘கர்ணன்’ திரைப்படத்தை இயக்கினார்.இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. 2023 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு அவர்களை வைத்து ‘மாமன்னன்’ படத்தை இயக்கினார். தற்போது துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரை வைத்து ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாரி செல்வராஜ், சினிமா என்னை தேர்ந்தெடுக்கவில்லை, நான் தான் சினிமாவை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். நீ எதையெல்லாம் புனிதம் என்று சொல்றியோ,அதை எல்லாம் உடைக்கிறது தான் என் வேலை, அப்படியே நீ புனிதம் அப்படினு சொல்ற விஷயம் எல்லாருக்குமானது சாமானியனுக்குமானது தான். இந்த சமூகத்தில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது, அதை சினிமா மூலம் தகர்க்க வேண்டும், அதற்காக தான் நான் வந்திருக்கிறேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews