விசுவைக் கடுப்பேற்றிய கண்ணதாசன்.. ஆனாலும் கவிஞருக்கு இம்புட்டு குசும்பு ஆகக் கூடாது..

கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எத்தனை கட்டுரைகள் எழுதினாலும், இன்னும் ஏதோ ஒன்று மிச்சம் உள்ளது போன்றே தோன்றும். அந்த அளவிற்கு தமிழ் இலக்கியத்திலும், திரையிசைப் பாடல்களிலும், திரைத்துறையிலும் மகத்தான பணியாற்றியவர். அனைவரும் எழுதுகின்றனர். ஆனால் கண்ணதாசனின் வரிகளில் உள்ள நிலைத்த தன்மையும், ஆழமான கருத்தியலும், அனுபவ ரீதியாக உணர்ந்து எழுதுவதும் ஏனோ மற்ற கவிஞரிகளின் வரிகளில் கொஞ்சம் வேறுபடுத்தியே காட்டுகிறது.

அதேபோல கண்ணதாசனின் வாழ்க்கையும் அனைவருக்கும் ஒரு பாமாகவும் விளங்குகிறது. கவிஞரின் கவிதை ஞானம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

இயக்குநர் விசுவின் எழுத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1981-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் குடும்பம் ஒரு கதம்பம். வழக்கமான விசுவின் டிரேட் மார்க் வசனங்களுடன், பிரதாப், சுகாசினி ஆகியோரது நடிப்பில் குடும்பப் படமாக வந்தது. தமிழில் வெற்றி பெற்று இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. இந்தப் படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன், பாடல்களை கவிஞர் கண்ணதாசன், வாலி ஆகியோர் இயற்றினர்.

இந்தப் படம் உருவாகிக் கொண்டிருந்த தருணத்தில் எஸ்.பி.முத்துராமன் விசுவிடம் கண்ணதாசனிடம் பாடலை வாங்கி வருவதற்காக அனுப்புகிறார். விசுவும் கண்ணதாசனிடம் சென்று பாடலுக்கான காட்சியை சொல்லத் தொடங்குகிறார். ஆனால் கண்ணதாசன் அதைக் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. (முகவரி படத்தில் ஒரு காட்சி வருமே அதே போன்று) வழக்கம்போல் தனது நண்பன் எம்.எஸ்.வியுடன் வழக்கமான அரட்டைகளில் ஈடுபட்டிக் கொண்டிருக்க விசுவுக்கு கண்ணதாசன் மேல் எரிச்சல் வந்திருக்கிறது.

கேப்டன் விஜயகாந்தை ஒதுக்கிய நடிகைகள்.. அவமானங்களை உரமாக்கிய கேப்டனின் அந்த நல்ல மனசு..

நாம் இவ்வளவு உணர்ச்சிப் பூர்வமாகக் கதையைக் கூறுகிறோமே ஆனால் இவர் காதில் வாங்காமல் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார் என்று. விசு கதையைச் சொல்ல நிறுத்தும் போது கண்ணதாசன் ஏன் நிறுத்திவிட்டாய் மேலே சொல் என்றிருக்கிறார். விசுவும் இடைநிறுத்தாது சொல்ல, இறுதியில் கண்ணதாசன் உதவியாளரை அழைத்து இவ்வாறு பாடல் வரிகளை எழுதுகிறார்…
“குடும்பம் ஒரு கதம்பம்
பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதி மயங்கும்
பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை
தேவி ஒரு பாதை
குழந்தை ஒரு பாதை
காலம் செய்யும் பெரும் லீலை…”

இதைக் கவனித்த விசுவிற்கு ஒரே ஆச்சர்யம். படத்தின் மொத்தக் கதையையும் ஒருசில வரிகளில் கூறிவிட்டாரே என்று. மேலும் சில இடங்களில் சந்தேகம் ஏற்பட கண்ணதாசன் அவற்றிற்கும் விசுவினை அழைத்து அர்த்தம் கூறியிருக்கிறார். இப்படி அவரது நாவில் சரஸ்வதி நிரந்தரமாகக் குடி கொண்டு காலத்தால் அழியாத பல காவியப் பாடலைப் படைக்க கண்ணதாசனைப் படைத்திருந்தார் என்பதே நிதர்சனமான உண்மை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...