1943-ல்.. 9 வயதில் நடிகை வாங்கிய சம்பளம் இவ்ளோவா.. நடனம், பாடல் என எல்லா ஏரியாலயும் கில்லி.. ஓ ரசிக்கும் சீமானே நடிகையை மறக்க முடியுமா..

தமிழ், தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை குமாரி கமலா. மயிலாடுதுறையை சேர்ந்த இவர், தந்தையின் தொழில் நிமித்தம் காரணமாக மும்பையில் வளர வேண்டிய சூழல் உருவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து சிறு வயதிலேயே கதக் நடனம் கற்றுக் கொண்டார். நடனத்தை தாண்டி, பாடலிலும் அவருக்கு அதிக விருப்பம் ஏற்பட, அதனைக் கற்றுக் கொண்டு தேர்ந்தவராகினார் குமாரி கமலா.

நான்கு வயதிலேயே சங்கீதம் மற்றும் நடனம் ஆகியவற்றில் அசத்திய குமாரி கமலா, நாடகத்திலும் நடிக்க மழலையாக அவர் பின்னியதைக் கண்டு பலரும் மெய்சிலிரித்து போயினர். இதனைக் கண்ட இயக்குனர் கல்யாணசுந்தரம், அவரை குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு திறமையால் பலரது கவனத்தையும் அவர் பெற்றார்.

தனது 9 வது வயதில், குமாரி கமலா நடித்த கிஸ்மத் என்ற திரைப்படம், அவரது புகழை இன்னும் அதிகம் பரவ செய்தது. அந்த சமயத்தில் ஒப்பந்த நடிகையாக இருந்த குமாரி கமலா, மாதத்திற்கு 100 ரூபாய் சம்பளம் வாங்கினார். மாதத்திற்கு 100 ரூபாயா என்று பலருக்கும் சாதாரணமாக தோன்றலாம். ஆனால், குழந்தை நட்சத்திரமாக குமரி கமலா 100 ரூபாய் சம்பளம் வாங்கிய 1943 ஆம் ஆண்டின் போது 1 பவுன் தங்கத்தின் விலை ஏறக்குறைய 25 ரூபாய் தான். தற்போதைய காலத்தில் உள்ள தங்கத்துடன் ஒப்பிட்டு குமாரி கமலா சம்பளத்தை பார்த்தால் சுமார் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
O Rasikkum Seemanae

குழந்தை நட்சத்திரமாகவே இப்படி ஒரு சம்பளத்தை தனது திறமையால் வாங்கிக் கொண்ட குமாரி கமலா, அதிகமாக ஹிந்தி படங்களில் நடிக்காமல் அதிக தமிழ் படங்களில் நடிக்க காரணம், இரண்டாம் உலக போருக்கு பின்னால் அவர் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தது தான். இங்கே வந்து பரதநாட்டியம் கற்றுக் கொண்டு பின்னர் மெல்ல மெல்ல தமிழ் சினிமாவில் அதிகம் நடிக்க ஆரம்பித்த குமாரி கமலா, பரதநாட்டிய நடனத்திற்கென ஒரு பெயரை எடுத்தவர், பராசக்தி படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் ‘ஓ ரசிக்கும் சீமானே’ என்ற பாடல் இன்று வரையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பாடலாகும்.

அதே போல, குமாரி கமலாவின் திரை பயணத்தில் அவர் பெரும்பாலும் நடித்த கதாபாத்திரங்கள் நடனத்தை மையப்படுத்தியே தான் அமைந்தது. ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்றிருந்தால் நிச்சயம் இன்னும் பெரிய நடிகையாக வந்திருக்க வேண்டியவர்.
Kumari Kamala Dance

எம்ஜிஆருடன் இணைந்து நடிக்காத குமாரி கமலா, சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன் ஆகியோருடன் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நிறைய படங்களில், அவர் துணை பாத்திரங்களிலும், நடனம் ஆடும் கதாபாத்திரங்களில் அவர் அதிகம் நடித்ததால் தான் பெரிய நடிகையாக வர முடியாமல் போனது என்றும் ஒரு தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் நடனத்திற்கு முன்னோடியாக இருந்தவர் குமாரி கமலா என்ற தகவல் பரவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews