ஜீரோ சைஸ் நாயகிகளுக்கு சவால்விட்டு ஜெயித்த கல்பனா.. ‘சின்ன வீடு‘ படத்தை மறக்க முடியுமா?

ஹீரோயின்கள் என்றாலே மெல்லிய உடல்வாகும், நீளமான முடியும், அழகான தோற்றமும், ஜீரோ சைஸ் இடுப்பும் கொண்டுதான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத இலக்கணமே இருந்து வந்தது. ஆனால் பல திறமையான நடிகையர்கள் அதை உடைத்து நல்ல நடிப்புத் திறன் இருந்தால் போதும்.. அழகு என்பது முக்கியமல்ல என்பதை நிரூபித்து சாதித்துக் காட்டியுள்ளனர்.

அந்தவகையில் அழகும், திறமையும் கொடு சற்றே குண்டான உடல்வாகும் கொண்டு தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் கல்பனா.

நடிகை கல்பனா பிரபல நடிகைகளான கலாரஞ்சனி, ஊர்வசி ஆகியோரின் மூத்த சகோதரி ஆவார். கேரளாவின் திருவனந்தபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கல்பனா கல்பனா, சிறுவயதில் ‘விடருன்ன மொட்டுக்கள்’ என்னும் படம் மூலம் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இருப்பினும், 1980ஆம் ஆண்டு அரவிந்தன் இயக்கத்தில் பூக்குவெயில் என்பதுவே, அவர் திரையில் முன்னனி நாயகியாக நடித்த முதல் படம் ஆகும்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் துணை நடிகையை அழைத்து வரச் சொன்ன எம்.ஜி.ஆர்.. பதறிப்போன நடிகைக்கு காத்திருந்த ட்விஸ்ட்

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாக்யராஜின் இயக்கத்தில் அவர் நடித்த ‘சின்ன வீடு‘ படத்தில், ஜோடியாக நடித்து தமிழ்நாடெங்கும் பிரபலமானார், நடிகை கல்பனா. அந்த கதாபாத்திரத்தின் பெயர் பாக்யலட்சுமி எனச் சொல்லும் அளவுக்கு அதனை மிகவும் ஜனரஞ்சகமான கேரக்டராக வடிவமைத்து இருந்தார், இயக்குநர் பாக்யராஜ். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

அதேபோல் இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த், கோவை சரளா நடித்த சதி லீலாவதி படத்தில், ரமேஷ் அரவிந்தின் மனைவி லீலாவதியாக நடித்தும் அசத்தியிருப்பார், நடிகை கல்பனா. மேலும் திருமதி வெகுமதி, சிந்துநதிப்பூ, லூட்டி, டும் டும் டும், பம்மல் கே. சம்பந்தம், காக்கி சட்டை, தோழா ஆகியப் படங்களில் சிறந்த குணச்சித்திர வேடங்களிலும் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர்.

கதையில் திருப்தியடையாத ரஜினி.. சூப்பர் ஸ்டாருக்குச் சவால் விட்டு ஹிட் கொடுத்த இசைஞானி!

சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியான, சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 2வில் சின்ன பாப்பாவாக நடித்திருந்த நடிகை கல்பனா, மாமா மாப்ளே என்னும் சீரியலிலும் நடித்திருந்தார். தவிர, எக்கச்சக்க மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தேசிய விருதுக்குக் காரணமான படம்: 60ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் மலையாளத்தில் ‘தனிச்சல்லே ஞான்’ என்னும் படத்தில் வாழ்வில் துவண்டு இருந்த பெண்ணுக்கு நம்பிக்கையூட்டு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, நடிகை கல்பனாவுக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அதேபோல் துல்கர் சல்மானின் ’சார்லி’ படத்தில் மரியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்தமைக்காக, ஏசியா நெட் விருது பெற்றார்.

மலையாள இயக்குநர் அனில் குமாரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து 2012ஆம் தேதி விவாகரத்து பெற்றார். இத்தம்பதியருக்கு ஸ்ரீமயி என்னும் மகள் உண்டு. இறுதியாக இயக்குநர் வம்சி இயக்கத்தில், நடிகர் கார்த்தியின் தோழா படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது, ஹைதராபாத்தில் தங்கியிருந்த அறையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்,நடிகை கல்பனா.

இதையறிந்து அவரை எடுத்துக்கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், படக்குழு. ஆனால், அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவர் நம்மை விட்டு நீங்கினாலும் அவரது கதாபாத்திரங்களின் வழியாக இன்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...