ஆளே மாறிப்போன கோலி சோடா சீதா.. இந்த மூஞ்சி நடிகையா என கேட்டவர்களுக்கு வாயடைக்க வைத்த அழகு..!

சினிமாவில் ஒரு இலக்கணம் உண்டு. திறமை இல்லாவிட்டாலும் அழகாக இருப்பவர்களுக்கு தமிழ் சினிமா எப்பொழுதும் அவர்களுக்கு ஒரு முகவரியைக் கொடுத்து விடும். ஆனாலும் பல நடிகர்கள் தங்களது திறமையை மட்டுமே நம்பி பல்வேறு போராட்டடங்களுக்குப்பிறகு எப்படியோ வாய்ப்பினைப் பெற்று சினிமாவில் தங்களுக்கென ஒரு இருப்பிடத்தினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் திறமை இருந்தும் ஓரிரு படங்களில் தலைகாட்டிவிட்டு இன்று ஒதுக்கப்படும் நடிகையாக இருக்கிறார் சீதா. யார் இந்த சீதா என்கிறீர்களா? பழைய நடிகை அல்ல. கோலிசோடா, பத்து என்றதுக்குள்ள போன்ற படங்களில் தனது நடிப்பில் கவனிக்க வைத்தவர்தான் இந்த சீதா. 2014ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கோலி சோடா. இப்படத்தில் பசங்க திரைப்படத்தில் நடித்தத சிறுவர்கள் பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் அறிமுகமானவர் தான் சீதா. அந்த படத்தில் சீதாவின் கதாபாத்திரம் காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் ஆழமாக நின்றது.

இப்படத்திற்காக நிறைய பேரை ஆடிசன் செய்தும் திருப்தி இல்லாமல் இருந்த இயக்குநர் தற்செயலாக ரோட்டில் சென்று கொண்டிருந்த சீதாவைப் பார்த்ததும் அவரது தோழி வழியாக நடிக்க சம்மதம் வாங்கி நடிக்க வைத்துள்ளார். இப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.

முதன் முதலில் இந்தப் படத்துக்குத்தான் வெற்றி விழா கொண்டாடுனாங்களா? அதுவும் எப்படி தெரியுமா?

ஆனால் அதன்பின் இவருக்கு வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. மறுடியும் விஜய்மில்டன் விக்ரம், சமந்தா நடித்த ‘பத்து என்றதுக்குள்ள‘ படத்தில் சமந்தாவுடன் நடித்தார்.

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நான் அழகாக இல்லாத காரணத்தினால் எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. படத்தின் நடிப்பதற்கு முன்னர் என்னுடைய சொந்தமே உன்னை யாரவது நடிக்க கூப்பிடுவார்களா? உன்னுடைய உன்னை யார் நடிக்க கூப்பிடுவார்கள் என்று கூறினார்கள்.

Seetha

நான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது என்னுடைய அண்ணன் உறவினர்களுக்கு சொன்னார். ஆனால் அவர்கள் இந்த பொண்ணு போய் நடிக்க போகுதா? அதனுடைய மூஞ்சி எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள். அதோடு என்னுடைய நண்பர்களே கேட்டார்கள் உன்னயெல்லாம் எப்படி படத்தில் நடிக்க அழைத்தார்கள் என்று கேட்டார்கள்.“ இவ்வாறு பல அவமானங்களைச் சந்தித்த சீதா இன்று ஆளே மாறிப் போயிருக்கிறார்.

தனது பழைய தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இன்று பளபளவென ஜொலிக்கிறார். இவரது சமீபத்திய புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் வைரலாகப் பரவி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...