ஹேய் மிஸ்டர் எம்ஜிஆர்.. எந்த நடிகைக்கும் வராத துணிச்சல்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் பானுமதி செஞ்ச விஷயம்..

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலரும் பிற துறைகளில் அதிக திறமையுடன் இருந்தார்கள் என்ற சம்பவமே சற்று அரிதாக தான் இருந்தது. அதிலும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், தயாரிப்பு, பாடகி, இசையமைப்பாளர் என பல்வேறு துறைகளிலும் ஆண்களுக்கே போட்டி கொடுத்தவர் தான் பழம்பெரும் நடிகை பானுமதி.

தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா காலத்திலேயே நடிக்க தொடங்கியவர் பின்னாளில் வந்த எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடனும் இணைந்து நடித்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஒருமுறை எம்ஜிஆரை ஷூட்டிங் ஸ்பாட்டில் அதட்டியது தொடர்பான செய்தியை தான் தற்போது பார்க்க போகிறோம்.

நம்பர் ஒன் நடிகராக ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் திகழ்ந்தாலும் அவர் நாடோடி மன்னன் என்ற பெயரை படத்தை தயாரித்து, இயக்கவும் செய்திருந்தார். இந்த சமயத்தில் எம்ஜிஆர் இயக்கத்தில் புதிது என்பதால் படப்பிடிப்பு தளத்தில் கொஞ்சம் சிரமப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது. அது மட்டுமல்லாமல், இந்த படத்திலும் பானுமதி இணைந்து நடித்திருந்த சூழலில், சில காட்சிகளை திரும்பத் திரும்ப எம்ஜிஆர் எடுத்துக் கொண்டே இருந்ததால் நடிகையோ சற்று அதிருப்தி அடைந்ததாகவும் தெரிகிறது.

பல நாட்கள் இதே போன்று எம்ஜிஆர் காமித்து கொண்டே இருந்ததால் பொறுமை இழந்த பானுமதி, மிஸ்டர் எம்ஜிஆர். ஒரே காட்சியை எத்தனை முறை திரும்பத் திரும்ப எடுப்பீர்கள் என்றும், இந்த படத்திற்கு நீங்களே தயாரிப்பாளர் என்பதால் அனைத்து நடிகர்களும் உங்களை அட்ஜஸ்ட் செய்து போகிறார்கள் என்றும் அதை சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் கதையை நீங்கள் தெளிவாக எழுதி விட்டு வேறொருவரை வைத்து இயக்குமாறும், எம்ஜிஆரிடம் கேட்டுக் கொண்டு படப்பிடிப்பு தளத்திலிருந்து அவர் கிளம்பி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. எம்ஜிஆர் உள்ளிட்ட படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒருவர் கூட பானுமதி இப்படி செய்வார் என கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல், அனைவருமே அதிர்ந்து போய் மௌனத்தில் இருந்தனர்.

இதனால் வேறொரு திட்டம் போட்ட எம்ஜிஆர், கதையின் படி பானுமதியை பாதியில் இறந்து போவது போல மாற்றி பின்னர் சரோஜாதேவியை வைத்து படத்தை முடித்தார். இதனைத் தொடர்ந்து, படம் ஓடுமா இல்லையா என்ற குழப்பத்திலேயே வெளியாகி, நாடோடி மன்னன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அதன் பின்னர் எம்ஜிஆர் மற்றும் பானுமதி ஆகியோர் இணைந்து நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...