அந்நியன் படத்துக்காக அசுர உழைப்பைக் கொட்டிய விக்ரம்.. பட்டியலிட்ட ஷங்கர்..

சீயான் விக்ரம் என்றாலே நடிப்புதான் ஞாபகத்திற்கு வரும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு அடுத்தபடியாக நடிப்பில் வெளுத்து வாங்கும் நடிகர் யாரென்றால் அது விக்ரம் தான். சேது படத்திற்கு முன்னர் விக்ரம் நடித்த படங்கள் பெரும்பாலும் சரியாகப் போகாமல் இருந்தது. காரணம் அவருக்குள் இருக்கும் திறமையை இயக்குநர்கள் யாரும் கண்டுபிடிக்காதது தான். ஆனால் விக்ரமுக்குள் இருக்கும் நடிப்பாற்றலை கண்டறிந்து அவருக்கு ஏற்றாற் போல் கதையை அமைத்து மாபெரும் வெற்றிப் படமாக்கியவர்தான் இயக்குநர் பாலா.

சேது, பிதாமகன் ஆகிய இருபடங்களிலும் பாலா விக்ரமுக்குள் இருக்கும் இன்னொரு முகத்தை வெளிக்கொண்டுவர அதை அப்படியே பயன்படுத்திக் கொண்டவர்தான் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். இயக்குநர் ஷங்கர் முதன்முதலாக விக்ரமுடன் அந்நியன் படத்தில் இணைந்தார். அப்பொழுதே இவர்கள் இருவரின் கூட்டணி எப்படி வரும் என எக்கச் சக்க எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த 2005-ல் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் பெரும் பொருட்செலவில் உருவான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்திற்காக விக்ரமின் உழைப்பு மிக அபரிமிதமானது.

ஷங்கரின் இயக்கமும், சுஜாதாவின் வசனமும், விக்ரமின் அசுர நடிப்பும் இன்றும் படத்தைப் பார்ப்பவர்களை எப்படி எடுத்திருக்கிறார்கள் என்று வியக்க வைக்கத் தோன்றும். நடிகர் விக்ரம் இந்தப் படத்தில் கமிட் ஆனவுடன் இயக்குநர் ஷங்கர் அவரை நீளமாக முடி வளர்க்கச் சொன்னாராம். அதன்படி ஷுட்டிங் நாள் நெருங்க ஷங்கர் எதிர்பார்த்தபடி முடி வளரவில்ல.

எனவே கூடுதலாக கொஞ்சம் விக் பயன்படுத்தி அந்நியன் விக்ரம் காட்சிகளை எடுத்தனராம். மேலும் உடல்மொழியில் மூன்று கேரக்டர்களில் வித்யாசம் காட்ட வேண்டும் என்பதற்காக அம்பி விக்ரமுக்கு சற்று உடம்பு போட்டும், அந்நியன், ரெமோ விக்ரம் கதாபாத்திரங்களுக்கு உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தான உடம்பும் தேவைப்பட்டதால் விக்ரம் இந்தப் படத்திற்காக மிகவும் மெனக்கெட்டராம்.

உலகநாயகன் கமல் திரை வரலாற்றில் மிஸ் பண்ணிய படம்.. அலேக்காக தூக்கி ஹிட் கொடுத்த நெப்போலியன்

இதுமட்டுமன்றி மூன்று ரோல்களிலும் ஒருசேர நடிக்கும் காட்சியில் மாறி மாறி உடல்மொழியைக் கொண்டு வருவதில் ஷங்கர் எதிர்பார்த்ததற்கும் மேலாக தனது நடிப்பைக் கொட்டியிருக்கிறார் சீயான் விக்ரம். அந்நியன் இந்திய சினிமாவையே உலகத் தரத்தில் எடுத்துச் சென்றது.

மேலும் படப்பிடிப்பு நடைபெற்ற 6 மாத காலத்திற்குள் நிஜமாகவே முடி நிறைய வளர்ந்ததால் ஆரம்பத்தில் பயன்படுத்திய விக்-ஐ எடுத்துவிட்டு ஒரிஜினல் ஹேர்ஸ்டைலில் நடித்து முடித்தாராம் விக்ரம். இப்படி தனது நாடி நரம்பெல்லாம் நடிப்பு வெறி ஏறி அந்நியன் படத்திற்காக உழைப்பைக் கொட்டிய விக்ரம் திரையில் அதற்கான பலன்களை அறுவடை செய்திருக்கிறார்.

இதேபோல்தான் இந்தக் கூட்டணி மீண்டும ‘ஐ’ படத்திலும் இணைந்து இந்திய சினிமாவையே மிரள வைத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...