வடிவேலுவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத காமெடியை உருவாக்கியவர் மாரிமுத்து.. அவரே சொன்ன உண்மை

‘போலீஸ் வரும், அடிச்சு கூட கேட்பாங்க சொல்லாதீங்க’…’கிணத்தை காணோம்’ போன்ற காமெடியை உருவாக்கியது மாரிமுத்துதான்.. அவர் இறந்ததை கேட்டு எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.. ஏன் இப்படி நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை.. என நடிகர் வடிவேலு மதுரை விமான நிலையத்தில் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு கூறுகையில், “மாரிமுத்து திடீர்னு நம்மை விட்டு போவார்னு யாருமே எதிர்பார்க்கவில்லை.. நான் இப்ப மதுரையில் இருக்கிறேன்.. நேற்று தான் (நேற்று முன்தினம்) என் தம்பிக்கு 13 வது நாள் காரியம் நடந்தது. என் தம்பி மறைவுக்காக எல்லாரும் வீட்டில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது தான் நடிகர் மாரிமுத்து இறந்த செய்தியை நான் கேள்விப்பட்டேன் .

நான் கூட சீரியலில் தான் கிளைமேக்ஸில் இப்படி பண்ணிட்டாங்களோ என்று நினைத்தேன். அத்துடன் மாரிமுத்து இறந்து போனதை நான் முதலில் நம்பவில்லை.. ஆனால் கடைசியில் பார்த்தால், டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு இறந்துட்டார்னு செய்தி வந்தது. இதை கேட்டு எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.. ஏன் இப்படி நடக்குது என்று புரியவில்லை..

என் கூட ராஜ்கிரண் சார் ஆபிஸில் இருந்து , ரொம்ப நெருங்கி பழகிய நபர் அவர்.. மாரிமுத்து இயக்கிய படம் தான் கண்ணும் கண்ணும்.. அதில் தான், போலீஸ் வரும், அடிச்சு கூட கேட்பாங்க சொல்லாதீங்க.. என்ற காமெடியை மாரிமுத்து தான் உருவாக்கினார். அதே கண்ணும் கண்ணும் படத்தில் கிணற்றை காணாம் என்ற காமெடியையும் மாரிமுத்துதான் உருவாக்கினார்.

பெரிய நகைச்சுவை சிந்தனையாளர் மாரிமுத்து.. ரொம்ப மனசுவிட்டு சிரிப்பாரு.. இப்ப கூட சமீபத்தில் பெண்ணுக்கூட, மனைவிகூட சேர்ந்து அவர் கொடுத்த பேட்டியினை பார்த்தேன்.. அதில் ரொம்ப சந்தோஷமாக சிரிச்சு பேசிக்கொண்டிருந்தாரு.. அதை பார்த்து நானும் சந்தோஷப்பட்டேன்..

வடிவேலு சாரை பார்த்தா அப்படி தெரியாது… புலம்பி தவித்த சுந்தரா டிராவல்ஸ் நடிகை!

ஆனால் திடீரென அவர் இறந்து போய்விட்டார். இதுதான் சினிமாவில் தற்போது பேரதிர்ச்சியாக உள்ளது. தமிழ் சினிமாவில் எல்லாருமே மிரண்டு போய்விட்டார்கள். படத்தில் நடித்த கதாபாத்திரங்களை போல் இல்லை மாரிமுத்து. நிஜத்தில் மிகவும் அருமையான மனிதர்.. அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என வடிவேலு கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews