38 மொழிகளில் மிகப்பிரமாண்டமாக வெளியாகும் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம்!

சூரரைப் போற்று,ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என்னும் வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகர் சூர்யா கடந்த ஆண்டு நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கேம்யோவாக ரோலக்ஸ் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை மிரள வைத்திருப்பார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 10க்கு மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் பெரிய திரைப்படம் கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, தாய்லாந்து, கோவா, ராஜமுந்திரி என பல்வேறு இடங்களில் பல கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டு தற்போது சென்னையில் கங்குவா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் படத்தின் முழு படப்பிடிப்புகளும் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பான் இந்திய திரைப்படமாக உருவான கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் மட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த திரைப்படம் 38 மொழிகளில் வெளியாக உள்ளது. சூர்யாவின் கங்குவா திரைப்படம் தமிழ் மொழியை தாண்டி இந்தியாவை தாண்டி உலக அளவில் எங்கெல்லாம் சினிமா திரைப்படங்கள் பிரபலமாக உள்ளதோ அங்கு எல்லாம் இந்த திரைப்படம் திரையிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 3டி தொழில்நுட்பம் மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் இந்த படத்தை பார்வையிட முடியும்.

தலைவர் 171வது படத்தை இயக்க சக இயக்குனர்களின் உதவியை நாடும் லோகேஷ் கனகராஜ்!

இந்த படத்தில் நிஷா பதானி, யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார் கோவை சரளா,ரெடீம் கிங்ஸ்லி போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் முப்பெரும் வில்லன்கள் ஆக ஜெகபதிபாபு, பாபி தியோல்,கே ஜி எஃப் அவினாஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஐம்பெரும் பூதங்களை மையமாக வைத்து மிகச்சிறந்த 5 சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக படத்தின் ஒப்பனை கலைஞர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும் கங்குவா திரைப்படத்தின் பெரும் பகுதி வரலாற்று கதையை மையமாக வைத்து உருவாகி இருந்தாலும் மற்றொரு பக்கம் தற்காலத்தில் கோவாவில் நடைபெறும் ஆக்ஷன் சேசிங் காட்சிகளும் படம் இருக்கும் என தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் வெளியாகும் இந்த கங்குவா திரைப்படம் ஒரு வெற்றியின் மையில் கல்லாக இருக்கும் என்று திரைத் துறை வட்டாரங்களால் நம்பப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.