பிலிம் இன்டஸ்ட்ரிக்கு ரேர் பெர்சனாலிட்டி… தயாரிப்பாளருக்கு டென்சன் கொடுக்கவே மாட்டாரு…! யாரைச் சொல்கிறார் சுமன்?

டைரக்டர் ஷங்கர் இயக்கத்துல பிரம்மாண்டமாக வெளியான படம் சிவாஜி. சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக வந்து அசத்தியவர் நடிகர் சுமன். இதுபற்றி அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…

ஒரு போன் வந்தது. சிவாஜி படத்துல வில்லனா நடிக்கிறீங்களான்னு டைரக்டர் ஷங்கர் சார் ஆபீஸ்ல இருந்து ஒரு போன் வந்தது. இல்லங்க… நான் பேப்பர்ல சிவாஜி படத்தைப் பத்திப் பார்த்தேன். அதுல பேர் வரலயேன்னு கேட்டேன். இல்ல சார் அதெல்லாம் சூட் ஆகல.

இதுவரை நான் வில்லனா நடிக்கலயே..ன்னு சொன்னேன். கதையைக் கேளுங்கன்னு சொன்னாங்க. இல்ல சார்… டைரக்டர் ஷங்கர் படம்னா எதுக்குக் கதை கேட்கணும்னு சொன்னேன். இல்ல சார்.

Sivaji 1
Sivaji 1

கதையைக் கேளுங்கன்னு சொன்னாங்க. 100 % ஓகேன்னு சொன்னேன். அப்புறம் டைரக்டர் ஷங்கர் சார் வந்தாரு. கதையைப் பத்தி சொல்லும்போது வில்லனா உங்களை எப்படி மாத்தலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். மீசையை எடுப்பீங்களான்னு கேட்டார். கேரக்டருக்காக எடுக்குறேன்னாரு.

ஹேர்ஸ் எல்லாம் ஷாட் பண்ணி, செயற்கை பல் வச்சி சிரிக்கும்போது அந்தப் பல் தெரியுற மாதிரி அப்புறம் கூலிங் கிளாஸ் போட்டு கெட்டப்ப மாத்தினாரு. பர்சனலா என்னை பெசன்ட் நகர் டென்டிஸ்ட்டுட்ட கூட்டிட்டுப் போயி எனக்கு வசதியான பல்ல செட் பண்ணினாங்க. வேட்டி சட்டை தான் சூட்டா இருந்துச்சு.

இந்த மேட்டரைப் பேசுனதும் நான் ரஜினி சார்க்கிட்ட பேசினேன். இந்த மாதிரி ஆஃபர் வந்துருக்குன்னு சொன்னேன். நல்லது சுமன். உனக்கு என்னை விட நல்ல பேரு வரும்னாரு. 10 நாளைக்கு அப்புறம் சூட்டிங் நடந்துச்சு. எனக்கு வந்து அந்தப் படத்துல அவ்வளவு நல்லா பேரு வந்ததுன்னா அதுக்கு டைரக்டர் ஷங்கர் சார்.

Sivaji 2
Sivaji 2

அவருதான் இன்ச் பை இன்ச் பிரேம செதுக்குனாரு. அதுக்கு அப்புறம் பில்லர் மாதிரி இருந்து எனக்கு சப்போர்ட் பண்ணது ரஜினி சார். அவரு தான் சொன்னாரு. சுமன் ரஜினி இல்ல. இந்த கேரக்டர் தான். சிவாஜி, ஆதிசேஷன். இந்த ரெண்டு தான் தெரியணும்னு என்கரேஜ் பண்ணினாரு. அப்புறம் சத்யம் தியேட்டர்ல பிரிவியூ பார்த்தேன்.

எல்லாரும் பாராட்டுனாங்க. லேடீஸ்லாம் கூட பாராட்டுனாங்க. அதுல நல்ல லுக். நடந்து வந்தது கூட பயங்கரமா இருக்கு. ஆம்பளைங்க பாராட்டுறது வேற. பொம்பளைங்க பாராட்டுறது பெரிய விஷயம். வெறும் பேர் அண்ட் லவ்லி தான் எனக்கு மேக் அப். ரைட்டர் சுஜாதாவோட வசனம் எனக்கு பிளஸ் பாயிண்ட்டா இருந்துச்சு.

சூப்பர்ஸ்டார் ரஜினி நினைச்சாருன்னா எங்க வேணாலும் போகலாம். ஆனா சூட்டிங் நடந்தா எங்கயும் போக மாட்டாரு. எனக்கு தெரிஞ்சி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு நிறைய பங்ஷன் இருக்கும். எது இருந்தாலும் அவரு இடையில போக மாட்டாரு. சூட்டிங் முடிஞ்ச பிறகு தான் போவாரு. போகலாம்னு சொன்னா தான் போவாரு.

புரொடக்ஷனுக்கு டென்சன் கொடுக்கவே மாட்டாரு. பிலிம் இன்டஸ்ட்ரிக்கு ரேர் பெர்சனாலிட்டி. கமல், ரஜினிக்கு அப்புறம் தான் நான் வந்தேன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews