அறிஞர் அண்ணா என்று தெரியாமல் அவருக்கே மேக்கப் போட்டு பல்பு வாங்கிய எஸ்.எஸ்.ஆர்..

திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரும், அறிஞர் அண்ணாவின் தீவிர பற்றாராளராகவும் திகழ்ந்தவர்தான் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் அறிஞர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அவரது எழுத்தில் வாசகனாகி பட்டை தீட்டப்பட்டார். அண்ணாமேல் உயிரையே வைத்திருந்த இவர் தனது வீட்டிற்குக் கூட அண்ணா இல்லம் என்று தான் பெயரையே வைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் தெள்ளிய தமிழில், கூர்மையான வசனங்களை ஒரே டேக்கில் பேசும் அலாதி திறமை பெற்ற எஸ்.எஸ்.ஆர் சினிமாவிற்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். நடிகர் திலகம் சிவாஜியே இவரின் வசனம் உச்சரிப்பைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்.

தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் அறிஞர் அண்ணாவைப் பார்த்து விட மாட்டோமோ என்று எண்ணியவருக்கு பின்னாளில் அவருடன் இணைந்து அரசியல் பணியாற்றும் வாய்ப்பும் கிட்டியிருக்கிறது. அறிஞர் அண்ணா ஒருமுறை டி.கே. சண்முகத்தின் சந்திரோதயம் மேடை நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக ஈரோடு நகருக்கு வருகை புரிந்தார். இதனை அறிந்து கொண்ட எஸ்.எஸ்.ஆர். அண்ணாவை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என எண்ணி அந்த நாடகக் குழுவில் ஒப்பனை அலங்காரக் கலைஞராக பணிக்குச் சேர்ந்திருக்கிறார்.

அப்போது அவர் அலங்கார அறையில் ஒருவருக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். தான் எப்படியாவது அண்ணாவைப் பார்த்து விட வேண்டும் என எண்ணி மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவரிடம் தலையை இப்படி வை.. அப்படி வை..முகத்தைத் திருப்பு என்று பரபரப்புடன் மேக்கப் போட்டாராம் எஸ்.எஸ்.ஆர். அப்போது அவர் அருகில் மற்றொருவர் மேக்கப்புடன் வர அவரைச் சரியாக அடையாளம் தெரியாத எஸ்.எஸ்.ஆர்., இவர்தான் அண்ணாவா என்று கேட்டிருக்கிறார். அப்போது அவர் லேசாகச் சிரித்து விட்டு நான் தான் அண்ணா என்று கூற, எஸ்.எஸ்.ஆருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லையாம்.

படிக்கும் காலத்தில் கையில் பணம் இல்லாத தவித்த ரஜினி.. நண்பர்களுடன் சாப்பிடப் போன போது ஏற்பட்ட அனுபவம்

யாரைப் பார்ப்பதற்காக தன்னிடம் மேக்கப் போட அமர்ந்திருந்தவரிடம் அவசரப்படுத்தினோமோ கடைசியில் அவரே அண்ணா என்று தெரிந்த பிறகு தலை குணிந்தாராம். அண்ணாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உடனே நாடகத்திற்கு கிளம்பி விட்டாராம்.

பின்னாளில் அவரே திமுகவில் இணைந்து உலகிலேயே முதன்முறையாக திரைத்துறையில் இருந்து போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நடிகர் என்ற பெருமையைப் பெற்றார் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

Published by
John

Recent Posts