அண்ணாவின் இறப்பினை தாங்க இயலாமல் தற்கொலைக்கு முயன்ற எஸ்.எஸ்.ஆர்.. சுட்டுப் போட்டமாதிரி பெரியார் கேட்ட கேள்வி

தமிழ் சினிமாவில் திராவிடக் கருத்துக்களை அதிகம் பேசியவரும், அறிஞர் அண்ணாவின் மனசாட்சியுமாகத் திகழ்ந்தவர்தான் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சொந்த ஊராகக் கொண்டவர் தனது இல்லத்திற்கே ‘அண்ணா இல்லம்‘ என்று பெயரிட்டு அவர் மேல் அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்.

திரைப்படங்களில் கணீர் கணீர் என வசனங்களைப் பேசி நடிகர் திலகம் சிவாஜிக்கே சவால் கொடுத்த நடிகர் என்றால் அது எஸ்.எஸ்.ஆர் தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பராசக்தி எப்படி ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ அதே படத்தில் அறிமுகமாகிய எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் அதற்குப் பின் லட்சிய நடிகர் என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது. வசன உச்சரிப்பில் ஜாம்பவானாகத் திகழும் எஸ்.எஸ்.ஆர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகிய மூவருக்கும் மிக நெருக்கமானவர்.

இவர் நடித்த படங்களான \முதலாளி’, ‘தலைகொடுத்தான் தம்பி’, ‘எதையும் தாங்கும் இதயம்’, ‘குமுதம்’, ‘ரத்தக்கண்ணீர்’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘பச்சை விளக்கு’, ‘குலதெய்வம்’, ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’, ‘தெய்வப்பிறவி’, ராஜாராணி’, ‘காஞ்சித்தலைவன்’, ‘ராஜா தேசிங்கு’, ‘ரங்கூன் ராதா’ என பல படங்கள் அவருக்கு புகழைத் தந்தன.

அறிஞர் அண்ணாவின் மேல் தீவிர பற்றுக் கொண்டிருந்த எஸ்.எஸ்.ஆர். அண்ணா மரணமடைந்த போது தலைவரே போய்விட்டார் இனி நாம் எதற்கு உயிர்வாழ வேண்டும் என எண்ணி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதிகமான மதுவை அருந்தி தற்கொலைக்கு முயன்றவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

சிவாஜிக்காக ஒகே சொல்லிய கதையை எம்.ஜி.ஆருக்கு கொடுத்து ஹிட் ஆக்கிய ஆரூர்தாஸ்.. பதிலுக்கு சிவாஜி செஞ்ச தரமான சம்பவம்

அப்போது அங்கு அவரைப் பார்க்க வந்திருக்கிறார் தந்தை பெரியார். எஸ்.எஸ்.ஆரிடம் என் வயது என்ன..? உங்கள் வயது என்ன..? நான் மருத்துவமனையில் இருக்க வேண்டும் நீங்கள் வந்து என்னைப் பார்க்க வேண்டும். என்று கோபத்துடன் பேசி வீல்சேரில் சரசரவென போயிருக்கிறார். மேலும் குணமான பின் தன்னை வந்து சந்திக்குமாறும் கட்டளையிட்டுச் சென்றிருக்கிறார் தந்தை பெரியார். மருத்துவமனையில் தொடர்ந்து இருக்க முடியாத எஸ்.எஸ்.ஆர் பின் அங்கிருந்து வந்துள்ளார்.

அப்போது என்னை தந்தை பெரியார் மட்டும் அப்படிச் சொல்லவில்லை என்றால் நான் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...