Anchor to AMARAN ‘குட்டி தளபதி’ சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி.. பிறந்தநாள் சிறப்புப் பதிவு!

ஒரு நடிகர் எப்போது கொண்டாடப்படுகிறார் என்றால் அவரது படங்கள் சுமாராக இருந்தாலும் கூட இவர் படம் என்றாலே குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கலாம். ஜாலியாக இரண்டரை மணிநேரம் திரையில் ஒரு மாயாஜாலத்தினை நிகழ்த்தி அனைத்து தரப்பு ஆடியன்சையும் திருப்திபடுத்துவார் எனில் அப்போது அந்த நடிகர் வளர்ச்சி அடைய ஆரம்பிக்க ஆரம்பிக்கிறார் என்று அர்த்தம்.

கதைக்கான படங்கள் இல்லாமல், ஹீரோயிசம் இல்லாமல் மக்களை திருப்திப்படுத்தும் நோக்கம் கொண்டே எடுக்கப்படும் படங்களின் நாயகனாக இப்போது முன்னனியில் இருக்கும் நடிகர்களில் ஒருவர்தான் சிவகார்த்திகேயன். இவரது வளர்ச்சியை விஜய் டிவியின் ஒவ்வொரு செங்கலும் சொல்லும்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியைச் சேர்ந்த சிவகார்த்திகேயன் தனது இளம் வயதிலேயே மிமிக்ரி கலைகளில் சிறந்து விளங்கினார். திருச்சி ஜெ.ஜெ.கல்லூரியில் பொறியியல் படிப்பினை முடித்த இவர் மீடியா வாய்ப்புத் தேடி சென்னை வர தனது அபார மிமிக்ரி திறமையாலும் டைமிங் வசனங்களாலும் விஜய் டிவியின் தொகுப்பாளராக வலம் வர ஆரம்பித்தார்.

உலகநாயகன் கமல்ஹாசனை கே.பாலச்சந்தரிடம் அறிமுகப்படுத்தியத பிரபலம்.. ஆண்டவர் சினிமாவுக்கு கிடைத்த அருமையான சம்பவம்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலமாக தனது மீடியா வாழ்க்கையைத் துவக்கிய சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் வரும் விருந்தினர்களை தனது ஸ்டைலில் கலாய்க்க விரைவிலேயே புகழ் பெற்றார். இவரது திறமையைப் பார்த்த இயக்குநர் பாண்டிராஜ் தனது மெரீனா படத்தில் இவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். முதல் படத்தில் ஓவியாவுடன் சேர்ந்து நடித்த இவருக்கு அப்படம் சரியாகக் கைகொடுக்கவில்லை.

இதற்குப் பிறகு தனுஷ் தனது 3 திரைப்படத்தில் இவரை தன் பள்ளிப் பருவ நண்பனாக நடிக்க வைக்க அப்படத்தின் காமெடிக் காட்சிகள் பெரிதும் ரசிகர்களைக் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அதன்பின் இவர் மீண்டும் ஹீரோவாக நடித்த இயக்குநர் எழில் இயக்கத்தில் வெளியான மனம் கொத்திப் பறவை இவருக்கு ஹிட் படமாக அமைந்தது. இமானின் இசையில் இப்படத்தின் பாடல்களும், சிவகார்த்திகேயன், சிங்கம்புலி கூட்டணி வெடிச்சிரிப்புகளும் படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைத்தது.

கமலின் பேரனாக நடித்த அல்லு அர்ஜுன்.. 40 வருடத்திற்கு முன்பே கண்கலங்க வைத்த நடிப்பு..

அதன்பின் மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் நடித்திருந்தார். இப்படமும் இவருக்கு காமெடியில் கைகொடுக்க தொடர்ந்து அது போன்ற கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். அதன்பின் வந்த எதிர்நீச்சல் படமும் இவருக்கு வெற்றியைக் கொடுத்தது. இவரது வெற்றிக்கு தனுஷூம், இமானும், அனிருத்தும் மிகப்பெரும் ஆதரவாக இருந்தனர்.

தொடர்ந்து 2013-ல் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயன் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் படம் எனலாம். இந்தப் படம் பட்டிதொட்டியெங்கும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. முழுக்க முழுக்க காமெடிப் படமான இதில் பாடல்களும், சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ் நடிப்பும் குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. மேலும் சிவகார்த்திகேயன் இந்தப்படம் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றார்.

அதன்பின் அவருக்கு வந்த படங்கள் எல்லாமே அவருக்கு மைல்கல் படங்களாவே அமைந்தது. குறிப்பாக ரஜினி முருகன், மான் கராத்தே, காக்கிச் சட்டை, ரெமோ போன்ற படங்களின் மூலம் டீன் ஏஜ் வயதினிரின் ஆஸ்தான ஹீரோவாக மாறினார் சிவகார்த்திகேயன். இடையில் ஹீரோ, மிஸ்டர் லோக்கல் என சறுக்கல் படங்களைக் கொடுத்தவரை இயக்குநர் பாண்டிராஜ் மீண்டும் நம்ம வீட்டுப் பிள்ளை படம் மூலம் தூக்கி விட்டார். அதன்பிறகு இவரது கேரியரில் தோல்விப் படங்களே இல்லாமல் டாக்டர், டான் எனத் தொடர்ந்து அயலான் வரை வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இவரது வெற்றிக்கு முக்கியக் காரணம் திறமை மட்டுமே. மேலும் இளைய தலைமுறையைக் குறிவைத்து ஜாலியான படங்களின் மூலம் கருத்துக்களைச் சொல்லும் இவரின் நடிப்பு இவருக்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு. தொடர்ந்து தமிழ்சினிமாவில் சிவகார்த்திகேயன் வெற்றி வாகை சூட வாழ்த்துவோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...