படப்பிடிப்பின் பொழுது நிஜமாக இரத்த வாந்தி எடுத்த நடிகர் சிவாஜி! உண்மையின் பின்னணி..

நடிகர் திலகம் சிவாஜியை குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நாடகமாக இருந்தாலும் சரி திரைப்படமாக இருந்தாலும் சரி அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை முழுமையாக ஏற்று அந்த கதாபாத்திரத்தின் உருவமாகவே மாறி தன் நடிப்பு திறமையை வெளிக்காட்ட கூடிய ஒரு நடிகர். ஒவ்வொரு படத்திலும் அந்த கதைக்கேற்ப கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதை சிவாஜி வழக்கமாக வைத்திருந்தார். இப்படி சிவாஜி நடிப்பதை சிலர் ஓவர் ஆக்டிங் எனவும் கூறியுள்ளனர். ரசிகர்கள் கூறியது ஒருபுறம் இருந்தாலும் சிவாஜி முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் இருந்த நேரத்திலும் சிவாஜிக்கு துணையாக நடித்து வந்த மற்ற சில நடிகர்களுமே நடிகர் சிவாஜியை பார்த்து அவரது நடிப்பு ஓவர் ஆக்டிங் என தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இந்த கருத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி சொன்ன பதில், என்னுடைய திரைப்படம் கிராமத்தில் இருக்கும் படிக்காத பாமர மக்களுக்கும் கூட எளிதில் புரிய வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வளவு மெனக்கெட்டு நடிக்கிறேன். நான் நடிக்கும் விதத்தை யார் எப்படி கேலி செய்தாலும் எனக்கு பரவாயில்லை நான் இப்படித்தான் நடிப்பேன் என கூறியுள்ளார். மேலும் என்னால் மற்ற நடிகர்களைப் போல எளிமையாகவும் முக பாவனைகளை குறைத்துக் கொண்டும் நடிக்க முடியும், ஆனால் அதற்கு ஏற்ற கதாபாத்திரம் எனக்கு அமைய வேண்டும் அப்படி அமைந்தால் அதற்கேற்ற நடிப்பை நான் வெளிப்படுத்துவேன் என பெருந்தன்மையுடன் கூறியிருந்தார்.

இது எல்லாம் ஒருபுறம் இருக்க நடிகர் திலகம் சிவாஜி தன் உடல் நிலையை கூட கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் படத்தில் நடித்த சுவாரசியமான தகவல்களும் அன்றைய காலகட்ட சினிமாவில் நிகழ்ந்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் ஹீரோவாக மாறிய பின்பும் பல நாடக மேடைகளை அவர் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். அப்படி அதிகப்படியாக அவர் போட்ட மேடை நாடகங்களில் ஒன்றுதான் வீரபாண்டிய கட்டபொம்மன். இந்த நாடகத்தில் உணர்ச்சி மிக்க வசனங்கள் மிக அதிகமாக இருக்கும். நாம் இந்த நாடகத்தை திரைப்படமாக பார்க்கும் பொழுது கூட அதிகப்படியான உணர்ச்சி மிகுந்த சத்தத்துடன் கத்தி பேசும் வசனங்கள் அதிகமாக இருக்கும்.

அப்படிப்பட்ட இந்த நாடகத்தை மீண்டும் ஒரு இடத்தில் அரங்கேற்ற சிவாஜி நினைத்துள்ளார் அதற்கான ஏற்பாடுகள் மிகப் பிரமாண்டமாக நடக்க சிவாஜியும் அந்த நாடகத்தில் பங்கேற்றுள்ளார். இந்த நாடக அரங்கேற்றத்தின் பொழுது நடிகர் சிவாஜிக்கு உடல்நிலை சற்று சரி இல்லாமல் இருந்துள்ளது. அந்த காரணத்தினால் நடிகர் சிவாஜி தன்னுடன் ஒரு மருத்துவரை அருகில் வைத்துக் கொண்டே அந்த நாடகத்தை அரங்கேற்றினார். மேலும் சிவாஜியின் நாடகத்தை நேரடியாக பார்க்க விரும்பும் பல ரசிகர்கள் அங்கு கூட்டமாக ஒன்று கூடினர். ரசிகர்களை தொடர்ந்து சிவாஜியின் நடிப்பை பார்ப்பதற்கு பல ஹீரோக்களும் நாடகம் நடக்கும் இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அப்படி சிவாஜியின் நாடகத்தை நேரில் காண்பதற்காக ஏ ஆர் சீனிவாசனும் சென்றிருந்தார். நடிகர் ஏ ஆர் சீனிவாசன் நாடகத்தை பார்த்த அதே உற்சாகத்தில் அவரை வாழ்த்த வேண்டும் என்பதற்காக நடிகர் சிவாஜி இருக்கும் இடத்தை நோக்கி சென்றுள்ளார். அப்பொழுது சிவாஜியின் அருகில் இருந்த அந்த ஒரு மருத்துவர் நான் எவ்வளவு சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை. உங்களுக்கு இவ்வளவு உடல் நிலை குறைவு இருக்கும்பொழுது இப்படி ஆக்ரோஷமான வசனங்களை பேசி நடிக்கலாமா என கண்டித்து கொண்டிருந்தார். அப்போது சீனிவாசன் சிவாஜிக்கு அருகே பார்க்கும்பொழுது சிவாஜி ரத்த வாந்தி எடுத்திருப்பது தெரிய வந்திருந்தது.

அந்த நேரத்திலும் நடிகர் சிவாஜி மருத்துவரை பார்த்து எனக்கு உடல்நிலை சரியில்லை ஆனால் அதற்காக நடிப்பு எல்லாம் ஒத்தி வைக்க முடியாது. நடிப்பு என வந்துவிட்டால் அதில் நியாயமாக நடிக்க வேண்டும். குறைபட நடிப்பது எனக்கு பிடிக்காது எனக் கூறியுள்ளார். இந்த தகவலை நடிகர் சீனிவாசன் ஒரு பேட்டியின் பொழுது சிவாஜி பற்றி பெருமையாக கூறும் இடத்தில் விளக்கி இருந்தார்.

Published by
Velmurugan

Recent Posts