நடிகர் திலகம் சிவாஜி நடிக்க மாட்டேன் என அடம் பிடித்து.. பின் நடித்து சூப்பர் ஹிட் அடித்த அந்த படம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்த முன்னணி நடிகர்களுள் மூத்த நடிகர் திலகம் சிவாஜி. அதற்கு முக்கிய காரணம் படங்களில் நடிப்பதற்கு முன் அந்த படத்தின் கதையை தேர்ந்தெடுக்கும் விதம் தான். தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தன் முழு கவனத்தையும் செலுத்தி நடிப்பின் நாயகனாக சிவாஜி கொடிகட்டி பறந்து வந்தார். அந்த நேரத்தில் தான் ஒரு தயாரிப்பாளர் நடிகர் சிவாஜிக்காக ஒரு திரைப்படத்தை பார்த்து அந்த படத்தினை ரீமிக்ஸ் செய்து, நடிகர் சிவாஜி அதில் நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்து அந்த கதையை சிவாஜி இடம் கூறியுள்ளார்.

அதற்கு ஓகே சொன்ன சிவாஜி அந்த படத்தை முதலில் பார்த்துள்ளார். அந்த படத்தை பார்த்த பிறகு அவருக்கு அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் குறைந்துள்ளது. நடிகர் சிவாஜிக்கு அந்த படத்தின் கதையும் பிடிக்கவில்லை கதாபாத்திரமும் பிடிக்கவில்லை என்று அந்த படத்தில் நடிக்க முதலில் மறுத்துள்ளார். அதன் பின் தயாரிப்பாளர்களின் வற்புறுத்தலின் பேரில் அந்த படத்தில் சிவாஜி நடித்துள்ளார். அந்த திரைப்படம் வெளியாகி சிவாஜியின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய திரைப்படமாக இருந்தது. அந்த படம் என்ன படம் அந்த படத்தை இயக்கிய இயக்குனர் யார் என்பதை குறித்து முழு தகவலையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிவாஜி முதலில் நடிக்க மறுத்த அந்த திரைப்படம் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் சிவாஜி, மேஜர் சுந்தர்ராஜன்,சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, அசோகன், சிவக்குமார், நாகேஷ், மனோரமா என்ன பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்த 1968 ஆம் ஆண்டு வெளியான உயர்ந்த மனிதன் திரைப்படம். இந்த படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜியின் 125 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் திரைப்படம் வேறு மொழியில் வெளியான ஒரு படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம். பொதுவாக ஒரு படத்தை ரீமேக்கில் எடுக்கும் பொழுது படத்தில் நடிக்கும் ஹீரோ அந்த பழைய படத்தை பார்க்க வேண்டும். அப்படி அந்த படத்தின் கதை பிடித்து இருந்தால் மட்டுமே அவர்கள் நடிக்க ஒப்புக்கொள்வார்கள்.

இப்படித்தான் நடிகர் திலகம் சிவாஜியும் அந்த படத்தின் கதையை பார்த்துள்ளார். அதன் பின் நடிகர் சிவாஜிக்கு இந்த படத்தின் கதை சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த படத்தை பார்த்துவிட்டு படத்தின் கதை எனக்கு பிடிக்கவில்லை. அதற்கு பதிலாக இந்த படத்தில் வரும் மருத்துவர் கதாபாத்திரம் எனக்கு பிடித்துள்ளது. நான் வேண்டுமானால் அந்த மருத்துவர் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறேன். ஆனால் அந்த படத்தில் முழு கதாபாத்திரத்திலும் என்னால் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.

அடுத்தடுத்த தோல்வி… ஹீரோயினாக இல்லாமல் அக்கா கேரக்டரில் களமிறங்கும் நயன்தாரா!

இதைக்கேட்ட ஏவிஎம் நிறுவனம் சிவாஜி இன் மனதை மாற்றி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்கள். அதே நேரத்தில் இந்த திரைப்படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்குவதாக இருந்தது. அந்த சமயத்தில் நடிகர் சிவாஜிக்கும் இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு விற்கும் இடையே சில மனக்குழப்பம் இருந்ததாகவும் பேசப்பட்டிருந்தது.

இந்த மன குழப்பத்தை சரி செய்து தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பை துவங்கியது. அதன் பின் நடிகர் சிவாஜியும் இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சுவும் இயல்பாக பேசத் தொடங்கி விட்டனர். அதன் பின் வெற்றி கரமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து படமும் வெளியானது. பொதுவாக நடிகர் திலகம் சிவாஜி கதைகளை தேர்ந்தெடுப்பதில் சிறந்த வல்லுநர்.ஆனால் அவர் நடிக்க மாட்டேன் என மறுத்த கதையில் அவரே ஹீரோவாக நடித்து அந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சிவாஜியின் திரை வாழ்க்கையில் உயர்ந்த மனிதன் திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...