ஹீரோவா அறிமுகமாகி அப்பா கேரக்டர் வரைக்கும் நடித்த செல்வா.. இவரு இத்தனை படம் இயக்கவும் செஞ்சிருக்காரா?

திரைப்படங்களில் சில நடிகர்களை நாம் அதிகமாக கொண்டாடும் அதே வேளையில், இன்னொரு பக்கம் நடிப்பால் கவனம் ஈர்த்த போதிலும் சிலரை பெரிய அளவில் கவனிக்காமல் அப்படியே கடந்து சென்றிருப்போம். இப்படி சிறப்பாக பல படங்களில் நடித்த பிறகிலும் கூட அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாமல் போனவர் தான் நடிகர் செல்வா.

கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவான ’ஆத்தா உன் கோயிலிலே’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர், அதன்பின் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். பின்னர் சில படங்களில் குணச்சித்திர கேரக்டர் மற்றும் அப்பா, அண்ணன் கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்த செல்வா, தற்போது வரை அது போன்ற கதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

நடிகர் செல்வா, இயக்குனர் மற்றும் வசனகர்த்தாவாகவும் இருந்தார். சிறு வயதிலேயே அவர் நடிப்பில் ஆர்வம் கொண்ட நிலையில்  கல்லூரி படிப்பை முடித்ததுமே அவர் சினிமாவில் சான்ஸ் தேட தொடங்கிவிட்டார். அவரது தீவிர முயற்சிக்கு பின்னர் ’ஆத்தா உன் கோயிலிலே’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கஸ்தூரிராஜா இயக்கத்தில் தேவா இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

selva2

இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு தம்பி ஊருக்கு புதுசு, செண்பகத் தோட்டம், கிழக்கு வீதி உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர் கிடைத்தது. அதன் பிறகு மீண்டும் மாமியார் வீடு என்ற திரைப்படத்தின் மூலம் முக்கிய கேரக்டர்களில் நடித்த செல்வா அதன் பிறகு  மதுரை மீனாட்சி, அத்தை மக ரத்தினமே, மண்ணைத் தொட்டு கும்பிடனும், நாட்டுப்புற பாட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

புதிய பராசக்தி, நாட்டுப்புற நாயகன் போன்ற படங்களில் நடித்த அவர் கோல்மால் என்ற திரைப்படத்தை இயக்கினார். 1998 ஆம் ஆண்டு கோல்மால் என்ற திரைப்படத்தை இயக்கிய பின்னர், அந்த படம் தோல்வி காரணமாக 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகம் பக்கமே வரவில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து ’யுத்தம் செய்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் மீண்டும் ரீஎண்ட்ரி ஆனார்.

இதனை அடுத்து முகமூடி, சிவப்பு, ஈட்டி உள்ளிட்ட படங்களில் நடித்த செல்வா, அதன் பிறகும் சில படங்களை இயக்கியதாக தெரிகிறது. கடந்த ஆண்டு அஜித் நடித்த வலிமை என்ற திரைப்படத்தில் கமிஷனர் விஜயகுமார் என்ற கேரக்டரில் நடித்த செல்வா சமீபத்தில் வெளியான விக்ரம் பிரபுவின் திரைப்படத்தில் அவரின் தந்தையாகவும் நடித்தார்.

மேலும் நடிகர் செல்வா, வெள்ளி நிலவே என்ற திரைப்படத்தில் டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, டப்பிங் கலைஞர் என பல்வேறு அவதாரங்களில் தமிழ் சினிமாவில் பணி மேற்கொண்ட அவர் இன்னும் தனக்கு பொருத்தமான வேடத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.