நடிகரா பலருக்கும் தெரிஞ்ச பிரபலம்.. அடேங்கப்பா, இவருக்கு இப்படி சில திறமைகளும் இருக்கா?

பெரிய நடிகராக வேண்டும் என்றோ, இயக்குனராக வர வேண்டும் என்றோ பலரும் நினைப்பார்கள். ஆனால் இன்னொரு பக்கம், பல துறைகளில் முத்திரை பதித்து சாதித்தவர்களும் ஏராளம் பேர் உள்ளனர். அப்படி ஒருவரான விஜய் கிருஷ்ணராஜ் பற்றி பார்க்கலாம்.

தமிழ் திரை உலகில் நடிகர், கதாசிரியர் மற்றும் இயக்குனராக இருந்த விஜய் கிருஷ்ணராஜ் கதை, வசனம் எழுதுவதில் தான் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். அதன் பின்னர் நடிப்பதற்கும், இயக்குவதற்கும் வாய்ப்பு கிடைத்ததையடுத்து அதனையும் அவர் பயன்படுத்திக் கொண்டார். குறிப்பாக சின்னத்திரையில் இவர் பல தொடர்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.

சிவகுமார் நடித்த நூறாவது படமான ’ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ என்ற திரைப்படத்திற்கு தான் முதல் முதலாக விஜய் கிருஷ்ணராஜ் கதை, வசனம் எழுதினார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து அவருக்கு கதை, வசனம் எழுத அதிக வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் நடிகராகவும் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

’ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது’ சிவாஜி கணேசன் நடித்த ’கல்தூண்’ ’நெஞ்சங்கள்’ ’ஊரும் உறவும்’ ரஜினிகாந்த் நடித்த ’ராணுவ வீரன்’ ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதிய விஜய் கிருஷ்ணராஜ், கடந்த 1986 ஆம் ஆண்டு ’ராஜாத்தி ரோஜாக்கிளி’ என்ற படத்தில் முதல் முதலாக நடிக்க தொடங்கினார். இதன் பின்னர் ’பூந்தோட்ட காவல்காரன்’ ’தர்மம் வெல்லும்’ ’புலன் விசாரணை’ ’வேலை கிடைச்சிருச்சு’ ’ஏழை ஜாதி’ ’வான்மதி’ ’ரெட்டை ஜடை வயசு’ உள்பட பல படங்களில் நடித்தார்.

அதேபோல் ’கண்ணோடு கண்’ என்ற திரைப்படத்தை தான் இவர் முதல் முதலாக இயக்கினார். அதனை அடுத்து ’சிம்ம சொப்பனம்’ ’அண்ணன் என்னடா தம்பி என்னடா’ உள்பட ஒரு சில படங்களை இயக்கியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான குடும்பம், கோபுரம், வரம் ஆகிய தொடர்களுக்காக கதை வசனம் எழுதியவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரிஜாதம், லட்சுமி வந்தாச்சு, ஜெயா டிவியில் ஒளிபரப்பான கைராசி, குடும்பம், ஜீ டிவியில் ஒளிபரப்பான ரெக்க கட்டி பறக்குது மனசு உள்பட பல தொடர்களிலும் பணியாற்றினார்.

கடந்த 2000 ஆண்டுகளுக்கு பிறகு திரையுலகில் இவருக்கு குறிப்பிட்டத்தக்க வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து முழுக்க முழுக்க சின்னத்திரையில் தான் இவர் ஈடுபட்டார். அவர் கதை வசனம் எழுதிய சீரியல் மிகப்பெரிய அளவில் பிரபலமாகவும் செய்துள்ளது. அதே போல, பல ஹிட் தொடர்களில் நடித்து அனைத்து தமிழ் குடும்பங்களின் மத்தியில் கவனம் ஈர்க்கவும் செய்திருந்தார் விஜய் கிருஷ்ணராஜ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.