நளினி பற்றி ராமராஜன் சொன்ன ஒற்றை பதில்.. என்ன மனுஷன்யா..? ஆடிப்போன நிருபர்!

திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கும் போதோ, அல்லது உடன் பணிபுரியும் போதோ அவர்களுக்குள் காதல் வயப்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர். ஆனால் அவற்றில் சிலர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று இறுதியில் பிரிந்து வாழ்கின்றனர்.

அதில் கமல்ஹாசன்-சரிகா, பார்த்தீபன்-சீதா, ரகுவரன்-ரோகிணி, ராமராஜ்-நளினி, இயக்குநர் விஜய்-அமலாபால் எனப் பலரை உதாரணமாகக் குறிப்பிடலாம். இதில் பல சீரியல் நடிகர் நடிகைகளும் அடங்குவர்.

அந்த வகையில் ராமராஜனும் – நளினியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பின்னாளில் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிய நேரிட்டபோது ராமராஜன் நளினியைப் பற்றி கூறும்போது உண்மையாகவே அவரைப் பாராட்டலாம்.

நடிகர் ராமராஜன் கோர்ட்டுக்கு வந்த சமயம் நிருபர் ஒருவர், “உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் என்ன காரணமாக விவாகரத்து விண்ணப்பித்தீர்கள்?“ என்று கேட்டார்.

இவங்க வாரிசெல்லாம் பிரபல டாக்டர்களா? ஜெமினி முதல் ஷங்கர் வரை மருத்துவர்களான திரை வாரிசுகள்

அதற்கு நடிகர் ராமராஜன், இன்னும் விவாகரத்து வாங்கவில்லை, இப்போது வரை நளினி என் மனைவி, எனது மனைவியை பற்றிநானே வேற்று மனிதரிடமோ, அல்லது பொதுவெளியிலோ சொல்ல மாட்டேன்! என்றவர் கோர்ட்டுக்கு சென்று விட்டார்.

சில நாட்கள் கழிந்தது விவாகரத்து தீர்ப்பாகியது. கோர்ட்டில் இருந்து ராமராஜன் வெளியே வரும் சமயம் மீண்டும் அதே நிருபர், ”இப்போதாவது சொல்லுங்களேன்? உங்களுக்கும் நளினிக்கும் என்ன காரணத்தினால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது? விவாகரத்து வாங்கினீர்கள்? என்று கேட்க அதற்கு ராமராஜன், இப்போது எங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. நளினி யாரோ? நான் யாரோ? எங்கள் இருவருக்கும் தொடர்பு இல்லை. அதனால் இன்னொரு பெண்ணை பற்றி நான் சொல்வது நல்ல நாகரீகமாக இருக்காது” என்றாராம் மக்கள் நாயகன்.

இன்று சில மாதங்களிலேயே திருமண வாழ்க்கை கசந்து சமூக வலைதளங்களில் ஒருவரை மாற்றி ஒருவர் தங்கள் தனிப்பட்ட விஷயங்களை தம்பட்டம் அடித்து அந்தரங்கங்களை படம்போட்டுக் காட்டும் சினிமா ஜோடிகளுக்கு மத்தியில் மனைவி, பெண் என்ற இரு உறவுகளுக்கும் மரியாதை அளித்து அதனைத் திறம்பட கையாண்ட ராமராஜன் உண்மையாகவே சிறந்த பண்பாளர் தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.