நடிகரா பலருக்கும் தெரிஞ்ச ராமராஜன் ஒரு இயக்குனரா.. அவர் இயக்கத்தில் வெளியான படங்களின் லிஸ்ட்..

செண்பகமே, மாங்குயிலே, ஊரு விட்டு ஊரு வந்து உள்ளிட்ட பாடல்களை கேட்டதும் நமக்கு நினைவு வரும் ஒரு முகம் என்றால் அது ராமராஜனோடது தான். கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ராமராஜனை பலருக்கும் நடிகராக மட்டும் தான் தெரியும். ஆனால், அவர் நடிப்பிற்கு மத்தியிலும் நிறைய திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

நடிகராக ராமராஜன் கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். குறிப்பாக ’சிவப்பு மல்லி’ என்ற திரைப்படத்தில் குப்புசாமி என்ற கேரக்டரில் நடித்தார். ஆனாலும் அவர் ஹீரோவாக அறிமுகமான படம் ’நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படம்.

அதே வேளையில், அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவதற்கு முன்பே ’மண்ணுக்கேத்த பொண்ணு’ என்ற திரைப்படத்தை 1985 ஆம் ஆண்டு இயக்கினார். பாண்டியன் மற்றும் இளவரசி நடித்த இந்த படம் ஓரளவு வெற்றி பெற்ற படமாக விளங்கியது. அதனை அடுத்து மீண்டும் பாண்டியன் நடித்த ‘மருதாணி’ என்ற திரைப்படத்தினை இயக்கினார். இதையடுத்து ’ஹலோ யார் பேசறது’ என்ற படத்தை இயக்கினார். இந்த இரு படங்களும் சுமாரான வெற்றி பெற்றது.

ramarajan

இதனைத் தொடர்ந்து நடிப்பு, இயக்கம் என மாறி மாறி அவர் தனது பணியை செய்து கொண்டிருந்தார். ஒரு பக்கம் நடிப்பதற்கு அதிகமான வாய்ப்பு வந்தாலும் இன்னொரு பக்கம் இயக்குனர் பணியையும் அவர் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

1986 ஆம் ஆண்டு  அவர் இரண்டு படங்களை இயக்கினார். ‘மறக்க மாட்டேன்’ மற்றும் ’சோலை புஷ்பங்கள்’ ஆகிய இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து அவர் ’ஒன்று எங்கள் ஜாதியே’ என்ற படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் ஓரளவு வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்ததால் இயக்குனர் பணியை சில ஆண்டுகள் நிறுத்தி வைத்தார்.

1987 முதல் 1995 வரை அவர் தொடர்ச்சியாக பல படங்களில் ஹீரோவாக நடித்ததால் ஒரு படம் கூட அந்த காலகட்டத்தில் இயக்கவில்லை. இந்த நிலையில் 1996 ஆம் ஆண்டு ’அம்மன் கோவில் வாசலிலே’ என்ற படத்தை இயக்கினார். அந்த படத்திலும் அவரே ஹீரோவாக நடித்தார்.

ramarajan

இதனை அடுத்து ’நம்ம ஊரு ராசா’ ’கோபுர தீபம்’ ’விவசாயி மகன்’ ஆகிய திரைப்படங்களை வரிசையாக இயக்கினார். அதன் பிறகு நடிப்பு, இயக்கம் என இரண்டுக்குமே சில காலம் இடைவெளி விட்ட ராமராஜன் 2001 ஆம் ஆண்டு ’சீறிவரும் காளை’ என்ற படத்தை நடித்து இயக்கினார். ராமராஜன் இயக்கத்தில் வெளியான கடைசி படம் இதுதான்.

இதனை அடுத்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அவர் திரையுலகில் ஈடுபடவில்லை. 2012 ஆம் ஆண்டு தான் அவர் ’மேதை’ என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் சுமாரான வெற்றியை பெற்றது. இதனிடையே, கடந்த ஆண்டு சாமானியன் என்ற படத்திலும் ராமராஜன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.