தமிழ் சினிமாவின் சின்ன குஷ்பூ : ஹன்சிகாவின் இளமை ரகசியம் இதான்

தமிழில் தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. உருண்டை கன்னங்களும், குழந்தைப் பாங்கான முகமும், சற்றே பருத்த தோற்றமும் கொண்ட ஹன்சிகாவை முதல் படத்திலேயே தமிழ்நாட்டின் சின்ன குஷ்பூ என்று இரசிகர்கள் கொண்டாடத் துவங்கி விட்டனர். இவரின் இரண்டாவது படமே தளபதி விஜய்யுடன் சேர இவருக்கு அதிக ரசிகர்கள் சேர்ந்தனர். ஒரு கல் ஒரு கண்ணாடி தந்த பெரிய வெற்றியால் பல்வேறு இளசுகளின் கனவுக் கண்ணியாக மாறினார் ஹன்சிகா.

தொடர்ந்து ஜெயம்ரவியுடன் இவர் நடித்த எங்கேயும் காதல் படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனது. மீண்டும் இவர்கள் கூட்டணி ரோமியோ ஜுலியட், போகன் போன்ற படங்களிலும் தொடர்ந்தது. இவர்கள் காம்பினேஷனில் வந்த படங்களை மக்கள் வெகுவாக ரசித்தார்கள். ரோமியோ ஜுலியட் படத்தில் இவரின் இயல்பான நடிப்பு நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

தமிழ் திரையுலகுக்கு வந்து பத்து ஆண்டுகளைக் கடந்த ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக பூம்பூம் ஷக்கலக்கா தொடரில் நடித்துப் பிரபலமானவர். பின் இந்தி சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர்.

ஹீரோயினாக அவர் நடித்த படம் 2007-ல் தெலுங்கு மொழியில் உருவான தேச முதுரு என்ற படம்தான். முதல் படமே சிறந்த அறிமுக நாயகிக்கான விருதைப் பெற்றுக் கொடுத்தது. அதன்பின் தமிழில் வாய்ப்புகள் வர தொடர்ந்து பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

15 பேர் கூட தியேட்டர்ல இல்ல…சின்ன படங்களுக்கு இதான் நிலைமையா? புலம்பிய கிடா இயக்குநர்

அண்மையில் நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்த ஹன்சிகா, எனது ரசிகர்கள்தான் எனக்குப் பக்கபலம் என்றும், அவர்களின் ஆதரவே என்றும் என்னை இளமையாக வைத்திருக்கும் என்று பேட்டியளித்துள்ளார். எனது ரசிகர்களின் ‘அன்கன்டிஷனல் லவ்‘ எனக்கு எப்போதும் ஸ்பெஷல் என்றும் அவர்களுக்குப் பிடித்து விட்டால் கொண்டாடுவார்கள் என்றும், தமிழ் இரசிகர்கள் என்றுமே எனக்குப் ஸ்பெஷல்தான் என அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஹன்சிகாவின் நடிப்பில் கார்டியன் படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரில்லர் படமாக உருவாகியுள்ள இதில் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே ஹன்சிகா சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 2 படத்திலும் பேயாக நடித்தருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...