அறுவை சிகிச்சை முடிந்தது; நடிகர் பிரபு உடல்நிலை எப்படியுள்ளது?

நடிகர் பிரபுவுக்கு லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றபட்டு தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில், பிரபல திரைப்பட நடிகர் பிரபு நேற்று முன்தினம் (20 பிப் 2023) இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, நேற்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன.

அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய  பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...