அதிமுக கொடியை வடிவமைத்த நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நடிகர் பாண்டு

நடிகர் பாண்டுவை காமெடி நடிகராக மட்டுமே பலருக்கு தெரியும். இவர் மிகப்பெரிய ஆர்ட்டிஸ்ட் என்பது பலர் அறிந்திராத விசயம். தமிழ்நாடு டூரிஸம் டிபார்ட்மெண்ட் லோகோ இவர் வடிவமைத்ததுதான்.

e3a6e6d366643b64955027da5b889dc9

எம்.ஜி.ஆரை சிவாஜியையும் இணைத்து இவர் வரைந்த கேலிச்சித்திரத்தை முதலில் பார்த்த எம்.ஜி.ஆர் தனது படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்து வரும் காமெடி நடிகரும் பாண்டுவின் அண்ணனுமான இடிச்சபுளி செல்வராஜை அழைத்து உன் தம்பியை வந்து என்னை பார்க்க சொல் என சொன்னாராம். பாண்டுவும் முதன் முதலில் எம்.ஜி.ஆரை பார்க்கபோறோம் என இரவு முழுவதும் தூங்காமல் இருந்து காலையில் ராமாவரம் தோட்டதுக்கு சென்றாராம். தலைவர் நம்மை பாராட்டுவார் என நினைத்தாராம் அதற்கு மாறாக இது என்ன சித்திரம் இப்படி வரையலாமா சக நடிகர் சிவாஜி என்னை பற்றி என்ன நினைப்பார் என கடிந்து கொண்டாராம்.

தனது தவறை உணர்ந்து அடுத்த வாரமே எம்.ஜி.ஆர் அவர் நடித்த படங்களின் தொகுப்புகளை ஓவியமாக வரைந்து எம்.ஜி.ஆரிடம் காண்பித்தாராம். அசாத்திய திறமை பாண்டுவுக்கு இருப்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர் அதிமுக கொடியை உருவாக்க சொன்னாராம் பாண்டு உருவாக்கிய கருப்பு சிவப்பு என கலர்களில் நடுவில் அண்ணாதுரை படம் இருப்பது போன்ற லோகோவை நடிகர் பாண்டுதான் வடிவமைத்து கொடுத்திருக்கிறார். இதை பிரபல யூ டியூப் சேனலான டூரிங் டாக்கீஸில் கூறியுள்ளார். இந்த கொடியே தமிழ்நாட்டின் பிரதான கட்சியான அதிமுக கொடி ஆகும்.

அந்த லிங்க் இதோ

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...