ஒரே படம் தான்.. ஓஹோன்னு ஹிட் ஆன பாடல்கள்.. ஆனால் அட்ரஸே இல்லாமல் போன ஹீரோ!

இயக்குநர் பாராதிராஜா அறிமுகப்படுத்திய பல்வேறு நடிகர்கள் இன்றுவரை திரையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்க ஒருவர் மட்டும் அவரின் ஒரே படத்திற்குப் பிறகு ஆளையே காணோம். இப்படி முதலும், முடிவுமாக ஒரு ஹீரோவுக்கு அமைந்த படம் என்றால் அது காதல் ஓவியம் திரைப்படம் தான்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 1982-ல் வெளிவந்த ‘காதல் ஓவியம்’ திரைப்படம் சுமாரான வெற்றி என்றாலும் வைரமுத்து, இளையராஜா கூட்டணியில் இடம்பெற்ற பாடல்கள் நாயகன் கண்ணணை கிராமங்கள் வரை பிரபலப்படுத்தியது. கதாநாயகியாக ராதா நடிப்பில் அசத்தியிருப்பார். வெள்ளிச் சலங்கைகள், நதியில் ஆடும் பூவனம், நாதம் என் ஜீவனே போன்ற பாடல்கள் இன்னும் பிரபலமான பட்டியலில் இருப்பவை.

ஒரு ஹோட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த கண்ணனை அவரின் மேனரிசத்தால் ஈர்க்கப்பட்டு பாரதிராஜா அவருக்கு ஹீரோ வாய்ப்புக் கொடுத்தார். முதல் படமே கண் தெரியாத கதாபாத்திரம் என்றாலும் கண்ணன் அதை திறம்பட ஏற்று நடித்திருப்பார்.

சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய போதிலும், கண்ணணை மக்கள் ஹீரோவாக ஏற்றுக் கொள்ளவில்லை. படத்தின் தோல்விக்கு பலரும் அவரையே காரணம் என்று கூறினர். இப்படத்தை தொடர்ந்து நடிகர் கண்ணன் திரையுலகிற்கு விடை கொடுத்தார். சமீபத்தில் பிரபலமான சேனலில் ஒன்றில் பேட்டியளித்த அவர் “நான் ஒரு சிந்தி, என் உண்மையான பெயர் சுனில் கிருபலானி” என்று கூறினார்.

தலைவர் 171 படத்தில் இத்தனை மல்டி ஸ்டார் நடிகர்களா?.. லோகேஷ் கனகராஜ் வெறித்தனம்!..

மேலும் அவர் கூறுகையில், “1947ல் எனது குடும்பம் பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக இந்தியா வந்தது. நான் பெங்காலி சினிமாவில் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​எதிர்பாராத விதமாக காதல் ஓவியம் என்ற தமிழ்ப் படத்தில் நடித்தேன்.

இருப்பினும், படத்தில் எனது பங்கு தெளிவாக இல்லை, இது ரசிகர்களிடையே சரியாக சென்று சேரவில்லை. இந்தப் படத்தின் தோல்வி என்னை வெகுவாக பாதித்ததாலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததாலும், திரையுலகில் இருந்து விலக முடிவு செய்தேன். அதனால் நான் அமெரிக்கா சென்று அங்கு வசித்து வருகிறேன்.

படத்தில் ராதா போன்ற முன்னணி நடிகையுடன் இணைந்து பணியாற்ற முதலில் தயங்கியதாகவும் கண்ணன் தனது பேட்டியில் தெரிவித்தார். தற்போது 41 வருட இடைவெளிக்குப் பிறகு, வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிக்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளார் கண்ணன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...