இறந்த நண்பனை மனதில் வைத்து நடிகர் கமலஹாசன் செய்த தரமான சம்பவம்!

நீ பெரும் கலைஞன், நிரந்தர இளைஞன், ரசனை மிகுந்த ரகசிய கவிஞன் இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர் நடிகர் கமலஹாசன் தான். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்கள் கமலுடன் ஒரு படம் என்பது ஒரு சாதனையாக கொண்டுள்ளனர். மேலும் பல இயக்குனர்கள் கமலஹாசனை வைத்து படம் இயக்க வேண்டும் என்று போட்டி போட்டு வாய்ப்புக்காக கமலை நாடி வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக நடிகர் கமலஹாசன் இளம் இயக்குனர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து ஹோலிவுட் மிரள வைத்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தின் மூலம் கமலுக்கு இன்னும் வயதாகவில்லை என ரசிகர்களை உணர வைத்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் கமல் கொடுத்த ஒன் லைன் ஸ்டோரி தான் விக்ரம் திரைப்படம்.இந்த திரைப்படம் வெளியாகி உலக அளவில் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக நடிகர் கமலஹாசனின் திரைப்படங்களில் வியக்கத்தக்கும் பல டெக்னீசியன் வேலைகள் இருக்கும். படத்திற்காக மட்டுமே டெக்னீசியர்களுடன் கமலஹாசன் நெருங்கி பழகுவது உண்டு, அதன் பின் எந்தவித தொடர்பையும் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களான இரட்டை சகோதரர்கள் அன்பு அறிவு உடன் நடிகர் கமலஹாசன் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளார். அவர்களின் திறமைகளில் வியந்து பார்த்த கமலஹாசன் அவருடன் நட்புறவில் இருக்க வேண்டும் என தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு வந்துள்ளார். அந்த நேரத்தில் ஒரு முறை டெக்னீசியன் அன்பு அறிவுவிடம் உங்களின் ஆசை என்ன என கேட்டுள்ளார் அதற்கு அவர்கள் இயக்குனராக வேண்டும் என தனது விருப்பத்தை கூறியுள்ளனர். உடனே கமலஹாசனும் எனக்கான கதை ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள் எனக் கூறி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

யாரு இந்த பவதாரணி.. அவரின் சாதனைகள் என்ன? அறியாத பல தகவல்கள்!

நடிகர் கமலஹாசன் இப்படி கூறியதற்கு ஒரு பின்னணியும் உள்ளது. எம்ஜிஆர் படங்களில் நடித்து வந்த ஆர் எம் நம்பியாரின் மகன் தர்மசீலன் சத்யராஜ் மற்றும் கமல் நடித்த பழைய விக்ரம் திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டர் ஆக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் இவர் விக்ரம் தர்மா என சினிமா வட்டாரங்களில் அழைக்கப்பட்டு வந்தார். கமலின் ஆரம்ப கால படங்களில் ஒன்றாக பணியாற்றிய விக்ரம் தர்மா மீது கமலுக்கு தனி அன்பு இருந்துள்ளது. விக்ரம் தர்மா மிகப்பெரிய இயக்குனராக வேண்டும் என ஒரு ஆசையை மனதில் வைத்திருந்தார். ஆனால் சில காரணங்களினால் 2006 ஆம் ஆண்டு இவர் மரணம் அடைந்துள்ளார். தன் நண்பனின் ஆசையை மனதில் வைத்துக் கொண்டு அதை அன்பு அறிவு சகோதரர்களின் வாழ்க்கையில் நிறைவேற்றி அழகு பார்க்க வேண்டும் என நினைத்துள்ளார் கமல்.

2025 ஆம் ஆண்டு ஆக்ஷனை மையமாக வைத்து கமலஹாசனின் 237வது திரைப்படத்தை அன்பு அறிவு சகோதரர்கள் இயக்க உள்ளார்கள். விக்ரம், லியோ போன்ற திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிய இவர்களுக்கு கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டு விக்ரம் 2 ரிலீஸ் இருக்கு பின்பு அன்பு அறிவு சகோதரர்கள் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews