பொழுதுபோக்கு

லோக்கல் வேஷம்னாலும் வெளுத்துக் கட்டும் வில்லன்… இவரோட அண்ணன் யார் தெரியுமா?

பொதுவாக தமிழ்சினிமாவில் 2 விதமான நடிகர்கள் உண்டு. ஒன்று அவர்களது சொந்த பந்தங்கள் திரையுலகில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களது பெயரைக் கொண்டு இவர்களும் எளிதில் முன்னுக்கு வந்து விடுவார்கள்.

மற்றொன்று தனது சொந்தக்காலில் சுயம்புவாகத் தோன்றி தனது ஆர்வம் காரணமாக சினிமாவில் முன்னுக்கு வந்தவர்கள் தான் இவர்கள்.

Murali

அவர்களில் இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள். சினிமா சம்பந்தப்பட்ட சொந்தபந்தங்கள் இருந்தும் அவர்கள் பெயரை சிறிதும் பயன்படுத்தாமல் தனது சொந்தத் திறமையைக் கொண்டு முன்னுக்கு வந்திருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் நடிகர் டேனியல் பாலாஜி. இவரது அண்ணன் நடிகர் முரளி என்பது பெரும்பாலானோருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

90களில் தமிழ்த்திரை உலகின் முன்னணி நடிகராக இருந்தவர் முரளி. இவர் நடித்த பல படங்கள் செம மாஸாக இருக்கும். இதயம் படம் ஒன்றே போதும் இவரது சிறப்பைப் பற்றிச் சொல்ல. மேலும் கல்லூரி மாணவராக இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான்.

நடிகருக்கு கலர் முக்கியமல்ல. திறமை தான் முக்கியம் என்பதை நிரூபித்தவர்களுள் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த் போல பல அவமானங்களைக் கடந்துதான் இவரும் முன்னுக்கு வந்திருக்கிறார்.

Daniel Balaji

டேனியல் பாலாஜி முரளியின் உடன்பிறவா சகோதரர் தான். அதாவது தம்பி. எப்படி என்றால், இவர் நடிகர் முரளியோட அப்பாவின் 2வது மனைவிக்குப் பிறந்தவர்.

தனது அண்ணன் திரை உலகில் உச்சக்கட்ட நிலையில் இருக்கும்போதும், அவரது பெயரை சிறிதும் பயன்படுத்தாமல் திரை உலகில் நுழைந்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். இவருக்கு யாருடைய துணையும் இல்லாமல் தனது திறமை கொண்டே திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு இருந்ததாம்.

பல்வேறு கஷ்டங்களைக் கடந்து தமிழ்த்திரை உலகில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பிறகு பெரிய பெரிய ஹீரோக்களுக்கு எல்லாம் வில்லனாக நடித்தார். இதில் பெரிய விஷயம் என்னவென்றால், இவர் தனது அண்ணன் முரளி என்பதை அவர் இறந்த பிறகு தான் வெளி உலகிற்கே சொன்னாராம்.

இவர் நடிப்பு லோக்கலாக இருந்தாலும், அதிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிப்பார். அதுதான் அவரை இந்த அளவுக்கு வளர வைத்துள்ளதாம்.

வேட்டையாடு விளையாடு, மாயவன், பைரவா, பொல்லாதவன், வட சென்னை, காக்க காக்க உள்பட பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

Published by
Sankar

Recent Posts