தொடர் தோல்வியில் துவண்டு போன பரத்…! கடைசியில் கைகொடுத்த படம் இதுதான்…!

கட்டுமஸ்தான உடற்கட்டு, நல்ல நடிப்பு, நல்ல டான்ஸ் என இருந்தும் ஒரு நடிகராக பரத் தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தைத் தக்கவைக்க முடியவில்லை. இப்படி கடின உழைப்பைப் போட்டும் பல நடிகர்களால் முன்னுக்கு வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் நடிகர் பரத். என்ன காரணம்னு பார்க்கலாமா…

நடிகர் பரத் ஆரம்பத்தில் தமிழ்சினிமாவில் அடி எடுத்து வைக்கும் போது நல்ல துவக்கத்தைத் தந்தார். கிரிக்கெட்டில் ஓபனிங் பேட்ஸ்மேன் அடித்துத் தூள் கிளப்பத் தானே செய்வார். அது போலத் தான் இவரும். இயக்குனர் ஷங்கரின் கைவண்ணத்தில் உருவான பாய்ஸ் படத்தில் அறிமுகமானார்.

Kaalidoss
Kaalidoss

அதில் பட்டையைக் கிளப்பினார். மலையாளத்தில் அவரது இரண்டாவது படமான 4 தி பீப்பிள். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து காதல், வெயில், எம் மகன் போன்ற சூப்பர்ஹிட் படங்களாக வந்தன.

பரத் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தினார். அது மட்டுமல்லாமல் தேவையான இடங்களில் தரமான நடிப்பைக் கொடுத்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. என்ன தான் இருந்தாலும் எல்லோருக்கும் இருக்கிற ஆசைத் தீ பரத்தையும் பற்றிக் கொண்டது. அப்படி என்ன ஆசை என்கிறீர்களா? மாஸ் ஹீரோவா ஆகணும்… அதுதான்..!

மேலும், துரதிர்ஷ்டவசமாக, அவரைப் பெரிய மாஸ் ஹீரோவாக மாற்றுவதற்காக வந்தார் டைரக்டர் பேரரசு.
அவரது திருப்பாச்சி படம் பரத்துக்கு பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. அடுத்து பரத்தை வைத்து பழனி படத்தை இயக்கினார். ஆனால் படம் பாதாள தோல்வியைத் தழுவியது.

தொடர்ந்து அவரது படங்களில் துரதிர்ஷ்டம் அணிவகுத்தது. முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு. படம் பார்க்க நல்லா தான் இருந்தது. ஆனாலும் தோல்வியைத் தழுவியது.
அடுத்து வந்தது கண்டேன் காதலை. இது ஒரு ரீமேக் படம். சந்தானத்தின் அதிர வைக்கும் காமெடி இருந்தும் படம் பிளாப் ஆனது. அடுத்து சேவல். இப்படியும் ஒரு படமா என்று நினைக்க வைத்தது. அடுத்து திருத்தணி. அதுவும் பிளாப்.

இப்படி தொடர்ந்துபடங்க ள் தோல்வியைத் தழுவ என்ன காரணம்? அழுத்தம் இல்லாத கதைகள் மற்றும் இயக்குனர்களின் தேர்வு தான். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது எந்த ஒரு மனிதனும் தொடர்ந்து தோல்வியைத் தழுவும் போது அவனுக்கு அடுத்து எப்படி தெளிவாக செயல்படுவது என்பதற்கான முடிவை எடுக்க முடியாது.

ஒரு குழப்பம் வந்து விடும். இதனால் தான் அடுத்தடுத்து பரத் கதைகளில் கவனம் செலுத்தாமல் எந்தப் படமானாலும் சரி. எந்த இயக்குனர் ஆனாலும் சரி. நமக்கு வாய்ப்பு வந்தால் போதும் என தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் தான் அவரது படங்கள் தொடர் தோல்வியைத் தழுவின.

எல்லாவற்றிற்கும் மேலாக இவருக்கு 25வது படம் ஒன்று வந்தது. பெரிதும் நம்பி எடுக்கப்பட்ட படம். பெயரைக் கேட்டாலே சிரிப்பு வந்து விடும். ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி. படம் செம காமெடி. செம காமெடி. ஆனால் படு பிளாப்.

Bharath
Bharath

கடைசியாக அவருக்கு வந்து கைகொடுத்த படம் காளிதாஸ். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு எம் மகனுக்குப் பிறகு அவர் முதன் முதலாக வெற்றியை ருசித்த படம் இதுதான். ராதே படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்தார். படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அவர் அரிதாக இருந்தாலும் இன்னும் உயிர் பிழைத்து வருகிறார்.

பரத் மனைவி துபாயில் ஒரு டாக்டராக உள்ளார். மற்றும் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளார். அவர் சென்னையில் திருவான்மியூர் அருகே ஒரு நடன ஸ்டுடியோவை வைத்திருக்கிறார். ரேஸர், பி லேட்ஸ் என்ற குழுவைச் சேர்ந்தவர்கள் அவருடைய ஸ்டுடியோ நடனக் கலைஞர்கள் மற்றும் அவர்கள் பல்வேறு இடங்களில் நடனமாடுகிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...