ஜெயலலிதா கண்ட கனவு.. கடைசி வரை நிறைவேறாமலே போன சோகம்.. பிரபல நடிகர் சொன்ன ரகசியம்

தமிழ் திரை உலகில் பல படங்களில் குணசத்திர கேரக்டரில் நடித்து அசத்தியவர் தான் ஏஆர்எஸ் என்ற ஏ ஆர் சீனிவாசன். பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகரான சோ அவர்களின் உடன்படித்த வகுப்பு தோழராகவும் இருந்தது மட்டுமின்றி அவர் ஒரு மிகச்சிறந்த வழக்கறிஞராக இருந்துள்ளார்.

சென்னையை சேர்ந்த ஏ ஆர் சீனிவாசன் சிறுவயதிலேயே படிப்பில் திறமையானவராக இருந்தார். அதனால் அவரது தந்தை ஏ எஸ் ராமமூர்த்தி அவரை வழக்கறிஞருக்கு படிக்க வைத்தார். சில ஆண்டுகள் அவர் வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார். மேலும் அவருக்கு கிரிக்கெட் விளையாட்டில் மிகச்சிறந்த ஆர்வம் உண்டு என்பதால் சென்னை சவுத் ஜோன் உள்ளிட்ட ஒரு சில கிரிக்கெட் அணிகளிலும் அவர் விளையாடினார். அவருடன் சட்டக் கல்லூரியில் படித்தவர் தான் சோ ராமசாமி.

ஒய் ஜி மகேந்திரனின் தந்தை பார்த்தசாரதி தான் அவருக்கு நாடக உலகில் வாய்ப்பை தேடி கொடுத்தார். பல தூர்தர்ஷன் நாடகங்களில் ஏஆர்எஸ் நடித்தார். மேலும் அவரது கேரக்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததையடுத்து அவருக்கு ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

ars1

விஜய் டிவி, கலைஞர் டிவி, தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பல நாடகங்களிலும் அவர் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தான் அவருக்கு திரையுலகிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராமன் பரசுராமன், மீண்டும் கோகிலா, ரங்கா, இளமை காலங்கள், தாய்வீடு, தென்றலே என்னை தொடு போன்ற படங்களில் அவர் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருக்கிறார்.

கமல்ஹாசன் நடித்த நாயகன், மோகன் நடித்த பாடு நிலாவே, பாரதிராஜா இயக்கத்தில் உருவான ரஜினியின் கொடி பறக்குது உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். திரையுலகம் மற்றும் நாடக உலகில் அவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நடித்துள்ளார். மேலும் அவரது நடிப்பு சேவையை பாராட்டி அவருக்கு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது. தற்போது 90 வயதிலும் ஏஆர்எஸ் அவர்கள் நலமுடன் இருந்து வரும் சூழலில், இன்னும் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் வாழ்த்தாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஏஆர்எஸ், ஊடகம் ஒன்றிற்காக அளித்திருந்த பேட்டியில் ஜெயலலிதா தனக்கு நன்கு அறிமுகம் என்றும் ஜெயலலிதாவுக்கு ஒரு கலெக்டராக வேண்டும் என்ற கனவு இருந்தது என்றும் ஆனால் அவரது வாழ்க்கை பல திசைகளில் மாறி கடைசியில் கலெக்டரையே வேலை வாங்கும் முதலமைச்சராக ஆகிவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews