நடிகர் அஜித்தை மிரட்டிய திரைப்பட தயாரிப்பாளர்! அட இது எல்லாம் ஒரு காரணமா?

நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இதனால் அஜித் மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டதாக அவரது ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்த திரைப்படம் வெளியாகி 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளிவர துவங்கியது அஜித் தனது 62 வது திரைப்படத்தை முதலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாக இருந்தது.

அதன் பின் சில காரணங்களால் அந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டது அதன் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது 62 ஆவது படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார் இந்த அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியானது. இதைத் தொடர்ந்து எந்த அறிவிப்பும்  அடுத்து வெளியாகாத நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் நான்கு மாதம் தாமதமாகவே நடந்தது. அதன் பின் கடந்த மாதம் இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்ற நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்பொழுது படக்குழு சென்னையில் ஓய்வெடுத்து வருகிறது. மேலும் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்றும் அதைத்தொடர்ந்து 70 நாட்கள் இந்த படத்தின் காட்சிகள் அதிரடியாக படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். தெலுங்கில் மிக பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் விஸ்வாசம் படத்திலிருந்து நடிகர் அஜித்தை அவர்கள் தொடர்பு கொண்டு வந்ததாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசு கிசுக்கப்படுகிறது.

இந்த கூட்டணியை தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் அஜித் தாம் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷன்களிலோ அல்லது பொது நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்வதில்லை. அதை ஒரு தனித்துவமான பாலிசியாக வைத்துள்ளார். இந்த பாலிசியை நடிகர் அஜித் பின் தொடர ஒரு தனித்துவமான காரணமும் உள்ளது. இது குறித்த சுவாரஸ்யமான தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.

சங்கடத்தில் நெளிந்த ரஜினி.. சூப்பரான அட்வைஸ் கொடுத்த சிவாஜி!

கடந்த 2010 ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா மிக பிரமாண்டமாக நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அஜித் நிகழ்ச்சியில் கலந்துக்க சொல்லி எங்களை திரையுலகில் சிலர் மிரட்டுகிறார்கள் என்று கருணாநிதியிடம் மேடையில் இருந்தபடியே தைரியமாக முறையிட்டார். அது பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது.

இந்நிலையில் அப்போது அஜித்தை மிரட்டியது யார் என்பது குறித்து புதிய தகவல் கோடம்பாக்கத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது. அதாவது அந்த சமயத்தில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளராக இருந்த சிவசக்தி பாண்டியன்தான் அஜித்தை மிரட்டியதாகவும், வரவில்லை என்றால் உங்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் ரெக்கார்ட் போடப்பட்டு சினிமாவில் நடிக்க முடியாமல் செய்து விடுவோம் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே வரும் டிசம்பர் 24ஆம் தேதி கலைஞர் கருணாநிதிக்கு தமிழ் திரை உலகம் சார்பில் நடத்தப்படும் கலைஞர் 100 விழாவில் அஜித் பங்கு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.