இயக்குனர் கட் சொல்லியும் ரத்தம் சிந்திய சிவாஜி! எந்த படத்தில் தெரியுமா?

தீபாவளி திருநாளில் வெளியாகி 100 நாட்களைக் கண்ட படம் சிவாஜி நடித்த பாபு. இந்த படத்தில் சிவாஜி காசநோயால் பாதிக்கப்பட்டவர் ஆகவும் தன்னை நம்பி இருக்கும் குடும்பத்திற்காக ரிக்ஷா ஓட்டுநராக கடுமையான வேலை செய்து தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் ஒரு சக மனிதனாக நடித்திருப்பார். படத்தின் கிளைமாக்ஸ் இல் நோய் முற்றி போய்விட்டதை சித்தரிக்கும் விதமாக இருமல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் சிரமப்பட்டு இருமி நடித்திருப்பார் சிவாஜி.

கட் கட் என்று ஏசி திருவலோக சந்தர் கூறியும் அந்த கதாபாத்திரமாக உருமாறி போயிருந்த சிவாஜி தொடர்ந்து இருமி கொண்டிருந்தார். அசோசியேட் இயக்குனரான எஸ்பி முத்துராமன் ஓடி சென்று சிவாஜி இடம் ஒரு சிறிய துண்டை கொடுத்து அண்ணே ஷார்ட் ஓகே டைரக்டர் கட் சொல்லிட்டார் என்று சொன்ன பிறகுதான் இருமலை நிறுத்தியுள்ளார். அந்த துண்டை வாங்கி வாயை துடைத்தார் சிவாஜி. தூண்டில் உண்மையாகவே இரத்தம். அந்த அளவிற்கு தன் தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டினார் நடிகர் திலகம் சிவாஜி.

அந்த வகையில் ஏசி திருவோக சந்தர் மலையாளத்தில் வெளிவந்த ஓடையில் நின்னு படத்தின் கதையை பாபு திரைப்படமாக உருவாக்கினார்.  இந்த படத்தில் சிவாஜியை ஹீரோவாக தேர்வு செய்ய ஒரு முக்கியமான காரணம் இருந்தது. பாபு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருலோக சந்திர சிவாஜி கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் தெய்வமகன்.  இந்திய சினிமாவையே கலங்கடித்த மிகப்பெரிய ஹிட் திரைப்படம். அதில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த திலகத்துக்கு மூன்று வேடங்கள். மூன்றிலும் தனக்குத்தானே போட்டி போட்டுக் கொண்டு நடித்தார் சிவாஜி.

கிராபிக்ஸ் இல்லாத அந்த காலத்தில் கேமராவை அசையாமல் ஒரே இடத்தில் நிலையாக வைத்து, மவுண்ட் செய்து மூன்று தோற்றங்களையும் அடுத்தடுத்து வெவ்வேறு ஒப்பனை, வெவ்வேறு நடிப்பு எனப் பிரித்து ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்றால் அது எவ்வளவு பெரிய சவால். மூன்று கதாபாத்திரங்களும் ஒரே காட்சியில் இடம்பெறும் படத்தின் முக்கியமான காட்சியை மிகவும் சிரமப்பட்டு படம் ஆக்கினார் ஏசி திரிலோக சந்தர். இறுதியில் எடிட்டிங் முடித்துவிட்டு பார்த்தால் அந்த ஒரு காட்சியின் நீளம் மட்டுமே ஏழு நிமிடங்கள்.

நீளத்தை குறைக்க வேண்டும் என படத்தின் எடிட்டர் உறுதியாக கூறியிருந்தார். ஆனால் அந்த காட்சியை திரும்பத் திரும்ப போட்டு பார்த்த இயக்குனர் திருலோக சந்தர் மூன்று சிவாஜியும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள் இதில் யாருடைய நடிப்பை நான் குறைப்பது. நம்முடைய நடிகர் திலகம் உலக கலைஞனாக மாறிவிட்டதற்கு இந்த ஒரு காட்சி போதும், எனக்காக இந்த காட்சியை அப்படியே விட்டுவிடுங்கள் என்று எடிட்டரிடம் கேட்டுக் கொண்டார்.

வெங்கட் பிரபுவின் அழைப்பிற்கு நோ சொன்ன விஜய்! அப்போ தளபதி 68 படத்தின் நிலைமை என்ன?

ஏசி திருவலோக சந்தர் பிடிவாதம் வீண் போகவில்லை. அதை போன்றதொரு காட்சி அமைப்போ, நடிகரோ இனி தமிழ் சினிமாவில் சாத்தியமே இல்லை என தெய்வமகன் படத்தின் ரிலீஸ் போது விமர்சகர் எழுதினார்கள்.அந்த அளவிற்கு தெய்வமகன் திரைப்படம் இந்திய சினிமாவில் எட்ட முடியாத உயரத்தை தொட்டது. அப்படிப்பட்ட தெய்வமகன் படத்தின் கூட்டணி உடனடியாக மீண்டும் அமைந்த போது நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக ஏசி திரலோக சந்தர் தேர்ந்தெடுத்த கதை தான் சிவாஜி பாபுவாக மாறி நடித்திருப்பார். இவர்களுடைய நட்பு மூலம் பல சிறந்த உணர்ச்சி காவியங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...