நடிகர் அஜித்திற்கும் பாலாவிற்கும் இடையே இப்படி ஒரு சம்பவமா! வெளியான அதிர்ச்சி அப்டேட்!

தமிழ் சினிமாவில் தனது துள்ளலான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகர்களில் ஒருவர்தான் அல்டிமேட் ஸ்டார் அஜித். அஜித் நடிப்பில் சமீபத்தில் துணிவு திரைப்படம் வெளியாகி 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த நவம்பர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் சில நாட்கள் இடைவெளிக்கு பின் தற்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகளும் நடந்து வருகிறது.

தொடர்ந்து 70 நாட்களுக்கு மேலாக நடத்தப்பட இருந்த விடாமுயற்சி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தற்பொழுது சில தோய்வுகள் ஏற்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்த அஜர்பைஜான் நாட்டில் தற்பொழுது புயல் காரணமாக ஏற்பட்ட சில காலநிலை மாற்றத்தினால் படப்பிடிப்புகளை நடத்துவதில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக படப்பிடிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் மூன்றாம் கட்டப்பட படிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படக்குழுவை சார்ந்த பலர் சென்னை திரும்பியுள்ள நிலையில் அஜித் தனது துபாய் வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அஜித் திரைப்படங்களுக்கு இணையாக தனது குடும்ப வாழ்க்கை பொழுதுபோக்குகளில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர். அடிக்கடி பைக் டூர்கள் செல்வது பைக் ரேஸ்களில் கலந்து கொள்வது மற்றும் துப்பாக்கிச் சூடு, சைக்கிளிங் என ரியல் ஹீரோவாக வாழ்ந்து வருகிறார். அதேபோன்று சினிமாவிலும் கமர்சியல் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அஜித் நடித்து வருகிறார். நடிகர் அஜித் பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிந்தாலும் இயக்குனர் பாலா உடன் இணைந்து குறிப்பிடத்தக்கது.

அதாவது சேது திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்தான் பாலா. இந்த படத்தில் கிடைத்த நல்ல விமர்சனம், வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நந்தா திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு முதலில் ஹீரோவாக அஜித் முடிவு செய்யப்பட்டு இருந்தது . அதன் பின் சில காரணங்களினால் இந்த படத்தில் நடிகர் அஜித் நடிக்க மறுக்க அதற்கு பதிலாக நடிகர் சூர்யா நடித்து இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிக்கவே தெரியாது என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் சிக்கி இருந்த நடிகர் சூர்யாவிற்கு நந்தா திரைப்படம் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதை எடுத்து இயக்குனர் பாலா இயக்கிய திரைப்படம் தான் நான் கடவுள்.

nan kadavul

இந்த படத்தில் நடிகர் அஜித் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வைரலாக பரவிய நேரத்தில் போஸ்டர்கள் வெளிவர துவங்கியது. போஸ்டரில் அஜித்தின் லுக்கை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க துவங்கியது. சில நாட்களும் மட்டுமே நடந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட்டு அதன் பின் அஜித்திற்கு பதிலாக நடிகர் ஆர்யா இந்த படத்தில் நடித்து இந்த திரைப்படம் வெளியானது. பொதுவாக இயக்குனர் பாலா தன் படங்களில் நடிக்கும் நடிகர்களிடம் இயல்பான நடிப்பை வரவழைக்கும் பட்சத்தில் அவர்களிடம் சற்று கடுமையாக நடந்து கொள்வது வழக்கம். ஹீரோக்களின் நடிப்பு திருப்தி ஆகாத பட்சத்தில் அவர்களிடம் வரம்பு மீறி அடிதடியில் இறங்கியதாகவும் சில செய்திகள் உண்டு.

மற்ற ஹீரோக்களுடன் போட்டி போடாமல் நேரடியாக இயக்குனரை தாக்கிய அயலான் படக்குழு!

இப்படிப்பட்ட சில சம்பவத்தின் காரணமாகவே நடிகர் அஜித் பாலாவின் திரைப்படத்திலிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதை அடுத்து வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.