பொழுதுபோக்கு

ஷாருக்கானை தொடர்ந்து அமீர்கான் வரை சென்ற யோகி பாபு புகழ்.. அடேங்கப்பா இப்படியொரு மேட்டரா?

தமிழ் சினிமாவில் வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட காமெடி நடிகர்களை வைத்து படங்களை கொடுத்து வந்த சிம்புதேவன் அடுத்து யோகி பாபுவை நடிக்க வைத்துள்ள போட் படத்தின் டீசரை தற்போது அமீர்கான் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் சிக்கிய அமீர்கானை போட் மூலம் தமிழ்நாடு அரசு மீட்டது. இந்நிலையில், சிம்புதேவனின் போட் படத்தின் டீசரை அமீர்கான் வெளியிட்டு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

போட் டீசரை வெளியிட்ட அமீர்கான்:

இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனரான சிம்புதேவன் இம்சை அரசன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். வடிவேல் நடிப்பில் உருவான அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. இந்த படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் வெளியான அறை எண் 305ல் கடவுள் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தனது உதவி இயக்குனரான சிம்புதேவனுக்கு இரண்டு படங்களையும் தனது சொந்தக் காசுலயே சங்கர் எஸ் பிக்சர்ஸ் மூலமாக தயாரித்திருந்தார்.

24-ஆம் புலிகேசி படத்தை ஆரம்பித்த நிலையில், வடிவேலு ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்தார் என பல கோடிகள் நஷ்டம் அடைந்த பின்னர் அந்தப் படத்தை நிறுத்திவிட்டு பெரிய பஞ்சாயத்தை வெடித்தது. அதன் பின்னர் கசடதபற எனும் படத்தை சிம்புதேவன் இயக்கி இருந்தார். இந்நிலையில் தற்போது யோகி பாபுவை வைத்து போட் எனும் படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தின் டீசர் தான் இன்று வெளியானது.

சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு:

இந்த ஆண்டு பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படத்தில் யோகி பாபு நடித்திருந்தார். இந்நிலையில் ஷாருக்கானை தொடர்ந்து தற்போது அமீர்கான் வரை யோகி பாபுவின் புகழ் ரீச் ஆகியுள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள போட் படத்தின் டீசரில் லைஃப் ஆஃப் பை படம் போல ஒரே போட்டில் நடப்பது போன்ற கதையை உருவாக்கியுள்ளார். சிறுவயதில் ஒரு படகு பழுதடைந்து விட்ட நிலையில் அதிக எடை இருந்தால் அந்தப் படகில் பயணிக்க முடியாது என்பதால், யாராவது ஒருவர் கடலில் குதிக்க வேண்டும் என்கிற கதை சொல்லப்படும். பொறாமை காரணமாக அனைவருமே அடித்துக்கொண்டு கடலில் விழுந்து இறந்து விடுவார்கள். அதை மையமாக வைத்து இப்படி ஒரு படத்தை சிம்புதேவன் உருவாக்கி இருக்கிறார்.

இதில், யோகி பாபுவுக்கு ஜோடியாக 96 படத்தில் நடித்த கௌரி கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் சின்னி ஜெயந்த், எம்எஸ் பாஸ்கர் என மொத்தமே ஒரு 10 கதாபாத்திரங்கள் தான் மொத்த படத்திலேயே இருக்கும் என தெரிகிறது. சுவாரஸ்யமான மேக்கிங் இருந்தால் நிச்சயம் இந்த படம் ரசிகர்களை என்டர்டெயின் செய்யும். சிம்புதேவனுக்கு கம்பேக்காக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Published by
Sarath

Recent Posts