மம்மூட்டி, மோகன்லால் படத்தில் நடித்தவர்.. இப்போ சீரியலில் ரொம்ப பிரபலம்.. யாரும் அறியாத பிரபல நடிகையின் சினிமா பயணம்..

கடந்த 80 களில் தமிழ், மலையாளம் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் சபிதா ஆனந்த். நடிகை சபிதா ஆனந்தின் தந்தை ஜேஏஆர் ஆனந்த், மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர். இந்த நிலையில் சபீதா ஆனந்த் 1987 ஆம் ஆண்டு ‘உப்பு’ என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் சுமார் 100 படங்களுக்கு மேலாக முக்கிய வேடங்களில் நடித்துள்ள சபிதா ஆனந்த், அதன் பிறகு தமிழிலும் சில படங்களில் நாயகியாக நடித்தார். குறிப்பாக ராம்கி நடித்த ‘சின்ன பூவே மெல்ல பேசு’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான சபிதா ஆனந்துக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படமான ’உணரு’ என்ற படத்தில் மலையாளத்திலும் அவர் பிரபலமானார். அந்த படமும் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

sabitha1

அதன் பின்னர் பல படங்களில் நாயகியாக நடித்த சபிதா ஆனந்த், ஒரு கட்டத்திற்கு பிறகு கிடைத்த வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் அம்மாவாக கூட அவர் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் சுமார் 200 படங்களில் நடித்த நடிகை சபிதா ஆனந்திற்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைக்க தொடங்கியவுடன் சீரியல்களில் கவனம் செலுத்தினார். குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு என்ற சீரியலில்  அவர்  முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதேபோல் ’நளதமயந்தி’ என்ற சீரியலில் பார்வதி என்ற கேரக்டரிலும் அவர் நடித்து வருகிறார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் சில தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த அவருக்கு கோகிலா எங்கே போகிறாள் என்ற சன் டிவி தொடர் கை கொடுத்தது. அதன் பிறகு அவர் விஜய் டிவியில் ’காவ்யாஞ்சலி’ சன் டிவியில் கோலங்கள், சிவசக்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். மேலும் பிள்ளை நிலா, தெய்வமகள், மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர், தமிழ் செல்வி போன்ற சீரியல்களில் நடித்தார்.

பிள்ளை நிலா சீரியலில் இவர் நடித்த நெகட்டிவ் கேரக்டர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தது. கடந்த 1975ஆம் ஆண்டு தனது நடிப்பு தொழிலை ஆரம்பித்த அவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதும் இந்த 50 ஆண்டுகளில் அவர் ஏற்காத வேடமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...