விசாகப்பட்டினம் விஷவாயு விவகாரம்-50 கோடி நஷ்ட ஈடு பசுமை தீர்ப்பாயம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்ஸ் என்ற நிறுவனம் லாக் டவுன் நேரத்தில் சரியாக பராமரிக்காமல் திடீரென தொழிற்சாலையை திறந்து உற்பத்தியை தொடங்கியதால் விஷ வாயு கசிந்து விசாகப்பட்டினம் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 10 பேர் பலியாகினர். ஆடு, மாடு, நாய்கள், பறவைகள் என பலவும் இறந்தன. நேற்று முன் தினம் நடந்த இந்த துயரசம்பவத்தால் மக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். ஏற்கனவே கொரோனா படுத்தும் பாட்டில் மக்கள் கவலையாக இருக்கும்போது இந்த நிகழ்வும் வாட்டி வதைத்து வருகிறது.


இதற்கிடையே இந்த சம்பவத்தை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் விஷவாயு பரவியதால் உயிர் நஷ்டம் அதிகமாக உள்ள தென்பதால் முன்பணமாக ரூ.50 கோடி செலுத்த வேண்டுமென நிறு வனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்காக நீதிபதி சேஷசயன ரெட்டி தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் நிய மனம் செய்துள்ளது. இக்குழு விசாரணை நடத்தி வரும் 18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

Published by
Staff

Recent Posts