இந்தியாவில் கிடைக்கும் 5 சிறந்த கம்ப்யூட்டர் மானிட்டர்.. சிறப்பம்சங்கள் மற்றும் விலை..!

கம்ப்யூட்டரில் மானிட்டர் என்பது மிகவும் முக்கியமானது என்பதும் குறிப்பாக தொழிலதிபர்கள் மற்றும் கேம் விளையாடுபவர்களுக்கு தரமான மானிட்டர் இருந்தால் மட்டுமே முழு திருப்தி கிடைக்கும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் இந்தியாவில் கிடைக்கும் ஐந்து சிறந்த கம்ப்யூட்டர் மானிட்டர் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

Lenovo Q-Series 24 இன்ச் மானிட்டர்

24 இன்ச் மற்றும் 1920×1080 தெளிவுத்திறன் கொண்ட காட்சியுடன், ஸ்டைலான நேர்த்தியான தோற்றத்தை வழங்குகிறது. அதிவேகத்தில் பணிகளைச் செய்ய வடிவமைக்கப்பட்ட இந்த மானிட்டர் அல்ட்ரா ஸ்லிம் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. உயரம் சரிசெய்தல், 120% SRGB வரையிலான வண்ணம், உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள், கண்களைப் பாதுகாக்க ஆண்டி-க்ளேர் உள்பட பல வசதிகள் இதில் உள்ளன. இதன் விலை: ரூ 12,490

Acer EK220Q மானிட்டர்

1920×1080 பிக்சல்கள் தெளிவுத்திறனைக் கொண்டுள்ள இந்த மானிட்டரில் 75Hz அம்சத்துடன் இருப்பதால் அனைத்து வகையான வேலைகளுக்கும் ஏற்றது. மிக மெல்லியதாகவும், எடை குறைந்ததாகவும் இருப்பதால் தனித்துவத்தை கொண்டுள்ளது. இதன் விலை: ரூ.7,360

Samsung 27-இன்ச் FHD மானிட்டர்

மிகவும் நம்பகமான, புகழ்பெற்ற பிராண்டுகளில் ஒன்றான Samsung நிறுவனத்தின் இந்த மானிட்டர் 16.7 மில்லியன் வண்ணங்கள் & 1000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் ஃப்ளிக்கர் ஃப்ரீ தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இதன் விலை: ரூ.12,299

Samsung 24-inch 1920 X 1080 மானிட்டர்

சாம்சங் நிறுவனத்தின் சிறந்த மானிட்டர்களின் ஒன்றான இதில் 24 இன்ச் ஸ்கிரீன் மானிட்டர் பெசல் லெஸ் டிசைன் மற்றும் ஐ சேவர் ஃப்ளிக்கர் ஃப்ரீ மோட் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. 75 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் உள்ள இதன் விலை: ரூ.9,399

MSI மாடர்ன் MD241PW மானிட்டர்

MSI மானிட்டர் தரமான காட்சியைக் கொண்டுள்ளது, நீண்ட நேரம் வேலை செய்தாலும் கண்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. சரியான உயரம், சாய்வு, சுழல், ஆகிய வசதிகளை பெற்றுள்ளது. இதன் விலை: ரூ 16,999

Published by
Bala S

Recent Posts