33 சிக்சர்கள்.. சிஎஸ்கே 17, ஆர்சிபி 16.. வேற என்ன சாதனைகள் நேற்றைய போட்டியில்?

சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி மூன்றாவது இடத்தை பிடித்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக நேற்றைய போட்டியில் சென்னை அணி 226 ரன்களும், பெங்களூர் அணி 218 ரன்களும் எடுத்துள்ளன. மொத்தத்தில் இந்த மைதானத்தில் நேற்றைய போட்டியில் 444 ரன்கள் இரு அணிகளும் சேர்ந்து எடுத்துள்ளன என்பதும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு போட்டியிலும் இவ்வளவு அதிகமான ரன்கள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

dinesh karthik

மேலும் நேற்றைய போட்டியில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன என்பதும் அதில் சென்னை பேட்ஸ்மேன்கள் 17 சிக்ஸர்களும் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் 16 சிக்ஸர்களும் அடித்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இதே போல் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன என்பதும் அதேபோல் 2020 ஆம் ஆண்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 200 ரன்களுக்கும் அதிகமாக பெங்களூர் மைதானத்தில் தான் அதிகமாக அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் மைதானத்தில் 26 முறையும், சென்னை மைதானத்தில் 17 முறையும் வான்கடே மைதானத்தில் 14 முறையும் கொல்கத்தா மைதானத்தில் 13 முறையும் 200க்கும் அதிகமான ரன்கள் அடிக்கப்பட்டன.

 

dhoni 200a

மேலும் 200க்கும் அதிகமான ரன்கள் அடித்த அணியின் பட்டியலில் சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 25 முறை 200க்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளது என்பதும் இரண்டாவது இடத்தில் பெங்களூர் அணி 23 முறை 200க்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நேற்றைய போட்டியில் பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.