32 ஆண்டுகள் நிறைவடைந்த ஊர்க்காவலன் திரைப்படம்

ரஜினிகாந்த், ராதிகா நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் கடந்த 1987ம் ஆண்டு இதே நாளான 4.9.1987 ல் ரிலீஸ் ஆன திரைப்படம். அந்த நேரத்தில் பிள்ளை நிலா உட்பட சில படங்களை இயக்கி புகழ்பெற்றிருந்த இயக்குனர் மனோபாலா ரஜினியை வைத்து இயக்கிய திரைப்படம்.


வித்யாசமான கதைக்கருவுடன் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.மலேசியா வாசுதேவன், ரகுவரன், மற்றும் சங்கிலி முருகன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இதில் சங்கிலி முருகனுக்கு கோவிலில் சாமியாடி குறி சொல்லும் வேடம். அவருக்கு பிடிக்காத காதல் ஜோடிகளை குறி சொல்கிறேன் என்று கொன்று விடும் கொடூர வேடம் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில் புகழ்பெற்றிருந்த இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்காவிட்டாலும் இப்படத்துக்கு இசையமைத்திருந்த சங்கர் கணேஷ் அதை நிறைவாக செய்திருந்தனர்.

பாடல்கள் தேனினும் இனிமையாக அமைத்தன. குறிப்பாக மாசி மாசம்தான் கெட்டி மேள தாளம்தான், மல்லிகைப்பூவுக்கு கல்யாணம் உட்பட சில பாடல்கள் மிக அருமையாக வந்திருந்தன.

ரஜினிகாந்த்தின் பணக்காரன், மூன்று முகம், பாட்ஷா உட்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம் வீரப்பன் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட இப்படம் இன்றுடன் 32வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

Published by
Staff

Recent Posts