ஏற்கனவே 28 கோடி.. இப்போ காவல்துறையினருக்கு 2 கோடி… அக்‌ஷய்குமாருக்கு நன்றி தெரிவித்த கமிஷனர்!!

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவானது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்கள் பலரும் உணவிற்கு வழியின்றி தவித்து வருகையில், விளையாட்டு வீரர்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், சினிமாப் பிரபலங்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்தவகையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியும், மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடியும் கொடுத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மும்பை போலீஸ் அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கி உள்ளார்.

இதுகுறித்த தகவலை அக்‌ஷய்குமாருக்கு நன்றி கூறும் விதமாக மும்பை போலீஸ் கமிஷனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுளார்.


கமிஷனரின் டுவிட்டருக்கு அக்‌ஷய்குமார், “எனது கடமையை செய்து இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு போலீசார்தான் காரணம்” என்று பதில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு மூன்று கோடி ரூபாயும், 25 லட்சம் ரூபாய் தூய்மை பணியாளர்களுக்கும், 25 லட்சம் ரூபாய் சென்னை செங்கல்பட்டு வினியோகஸ்தர் சங்கத்திற்கும், அம்மா உணவகங்களுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கி இருந்தார்.

அவரைப் போலவே அக்‌ஷய்குமாரும் கணக்குப் பாராமல் உதவி செய்து வருகிறார், இதுகுறித்து ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

Published by
Staff

Recent Posts