சினிமா இயக்குனர் ஆகணுமா 21 நாளில் இதை செய்யுங்க

கொரோனா, கொரோனா என 24 மணி நேரமும் செய்தி சேனல்களில் கொரோனாவை பார்த்தே பயந்து கிடக்காமல் இது போல விசயங்களை முயற்சி செய்யுங்கள்.


சினிமாக்களில் உங்கள் ஆதர்ஸ நாயகன் பறந்து பறந்து அடிக்கும்போதோ, பரபரப்பான காட்சிகளில் வரும்போதோ இது போல நாமளும் படம் எடுத்தா எப்படி இருக்கும் என சில சினிமா ஆர்வலர்கள் நினைப்பர்.

இவர்கள் சினிமா மீது பற்றுக்கொண்டவர்களாக இருப்பர்.இது போல சினிமா ஆர்வம் மிக்கவர்கள் சும்மா யோசித்து கொண்டு மட்டும் இல்லாமல் இந்த 21 நாள் வீட்டில் தனிமையை தேடி அமருங்கள். ஒரு பேப்பரை எடுங்கள் வித்தியாசமாக இந்த சமூகத்தில் நடப்பவற்றையும் நடந்தவற்றையும் சிந்தித்து ஒரு கதை எழுதுங்கள்.

அதை திரைக்கதைக்காக சீன் பை சீன் ஸ்க்ரிப்ட் ஆக எழுதுங்கள். தவறானவைகளை திருத்தி திருத்தி அக்கதையை மெருகேற்றுங்கள். வித்தியாசமான கதைகளை எழுதுங்கள்.

மற்ற நேரங்களில் இது போல எழுத வேண்டும், படிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள் வேலை சூழலில் அது முடியாத காரியமாக இருக்கும் . இதுதான் உங்களுக்கு சரியான நேரம் ஒரு சிறந்த திரைக்கதையாளராகவும் இயக்குனராகவும் மாறுங்கள்.

மெருகேற்றப்பட்ட உங்கள் கதையை காலம் நேரம் வரும்போது அதை பயன்படுத்தி படம் இயக்குவதும் அந்த கதையை படக்கம்பெனிக்கு விற்பதும் உங்கள் திறமை.

முதலில் இது போல முயற்சி செய்யுங்கள். வீணாக கொரோனா அப்டேட் பார்த்து பதட்டமடையாதீர்கள் வாட்ஸப் குரூப் வதந்திகளை தவிர்க்க 21 நாட்கள் வாட்ஸப் குரூப்பையே ஒத்தி வையுங்கள்.

உங்கள் திறமையை வெளிக்கொண்டு வாருங்கள்.

Published by
Staff

Recent Posts