மேக்ஸ்வெல் – டூ பிளஸ்சிஸ் அபார தொடக்கம்.. ஆனால் 200 க்குள் கட்டுப்படுத்திய ஆர்சிபி..!

இன்று நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஹைதராபாத் அணியின் மேக்ஸ்வெல் மற்றும் டூ பிளஸ்சிஸ் அபார தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த போதிலும் அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 200 க்குள் தான் ரன்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54ஆவது போட்டியில் மும்பை மைதானத்தில் பெங்களூரு   மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.

mi vs rcb1

அந்த அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி முதல் ஓவரிலேயே அவுட் ஆனார் என்பதும் அதை அடுத்து அனுஜ் ரவாத் ஆறு ரன்களில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கேப்டன் டூ பிளஸ்சிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடினர் என்பதும் டு டூ பிளஸ்சிஸ் 65 ரன்கள் மேக்ஸ்வெல் 68 ரன்களும் எடுத்தனர். இருவரும் களத்தில் இருந்த போது அணியின் ஸ்கோர் 230 போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இருவரும் அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகி சொதப்பினர். குறிப்பாக லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ் ஆகியோர் பந்துகளை வீணடித்தனர். இறுதியில் மும்பை அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை அணியின் பெஹண்ட்ரூப் மிக அபாரமாக பார்த்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில் 200 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் மும்பை அணி விளையாட உள்ளது. கடந்த சில போட்டிகளாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஃபார்மில் இல்லை என்ற நிலையில் இன்றாவது அவர் அடித்து விளையாடுவாரா மும்பை அணிக்கு வெற்றியை தேடி தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...